விரைவில் சச்சினுடன் பணியாற்ற வேண்டும்: இசையமைப்பாளர் தமன் விருப்பம்..

சச்சின் பாராட்டை மறக்க முடியாது என தெரிவித்துள்ளார் தமன். இது பற்றிய விவரம் காண்போம்..

’ஓஜி’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்துக்காக அமெரிக்காவுக்கு இயக்குநர் சுஜித்துடன் சென்றிருந்தார் இசையமைப்பாளர் தமன். நிகழ்ச்சியை முடித்துவிட்டு டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு பயணித்துள்ளார்.

தமன் பயணம் செய்த அதே விமானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரும் பயணித்துள்ளார். சச்சினை சந்தித்து பேசியது குறித்து தமன்,

‘கிரிக்கெட்டின் கடவுள் தி லெஜண்ட் உடன் பயணித்தேன். டல்லாஸிலிருந்து துபாய் வரும்வரை அருமையான நேரமாக அமைந்தது. என்னுடைய சிசிஎல் போட்டிகளின்போது பேட்டிங் செய்த வீடியோக்களை அவருக்கு காட்டினேன். அப்போது மாஸ்டர் சச்சின்

‘உங்களிடம் சிறந்த பேட்டின் வேகம் இருக்கிறது’ என்று கூறினார். அந்த வார்த்தைகளை மறக்க முடியாது. விரைவில் அவருடன் பணியாற்ற வேண்டும்’ என தெரிவித்துள்ளார் தமன்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் தமன். தெலுங்கில் ‘அகண்டா 2’, ‘த்ரிவிக்ரம் – வெங்கடேஷ் படம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

thaman shared with emotion that sachin praised his batting
Sachinsportsthamanசச்சின்தமன்