தளபதி 69 படம் குறித்து வெளியான தரமான அப்டேட், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

தளபதி 69 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.


thalapathy69 movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. தளபதி விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி இருக்கிறது என்றே சொல்லலாம்.

படத்துக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதன்படி இந்த படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகவும், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைய அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தப் படம் முடிந்த கையோடு விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்பதும் சமீபத்தில் பிரம்மாண்டமாக அரசியல் மாநாடு நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


thalapathy69 movie latest update viral
Latest updatemoviethalapathy69thalapathy69 movie latest update viralviralஎச்.வினோத்தளபதி 69தளபதி விஜய்