Browsing tag

Vairamuthu

ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு அமித்ஷா வாழ்த்து!

இந்திய இலக்கியத்தின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் ஞானபீட விருது இந்த ஆண்டு பிரபல தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 13-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய முன்னாள் அமைச்சர் கரண் சிங், ஞானபீட விருதை கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கி கௌரவித்தார். இந்நிலையில், ஞானபீட விருது பெற்ற வைரமுத்துவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கவிஞர் வைரமுத்துவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “இலக்கியம் […]

60வது ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து!

இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான 60வது ஞானபீட விருது, கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு கிடைத்த மூன்றாவது ஞானபீட விருது என்ற பெருமையும் கிடைத்துள்ளது. டெல்லியில் ஜூலை 13 அன்று நடைபெற்ற விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் கரண் சிங் விருதை வழங்கினார். ஞானபீட அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு பேசிய வைரமுத்து, தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்து […]

கவிஞர் வைரமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்

தமிழ் இலக்கியத்திலும், திரையுலகிலும் தனித்துவமான முத்திரை பதித்துள்ள கவிப்பேரரசு வைரமுத்து இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 1980-ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான வைரமுத்து, “இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதுவரை 8,000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ள […]

ரஜினி-வைரமுத்து சந்திப்பு: நிகழ்ந்த உரையாடல் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்து வருகின்றன. ஆனால், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகின்றார். தற்போது, ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு கமலின் தயாரிப்பில் உருவாகப்போகும் தலைவர் 173 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் ரஜினியும் சந்தித்துக்கொண்டனர். அப்போது […]

மகா கலைஞனே விரைவில் மீண்டு வா: பாரதிராஜாவுக்காக வைரமுத்து பதிவு..

இயக்குநர் இமயம் பாரதிராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பாரதிராஜா தற்போது நலமாக உள்ளார் என அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். ‘அவருடன் இருந்து கண்காணித்து வருகிறோம், அவரது உடல்நிலை குறித்து சரியான தகவல்கள் அவரது எங்கள் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே, அவரது உடல்நிலை குறித்து வந்துகொண்டிருக்கும் தகவல்களையும் செய்திகளையும் நம்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். […]

இளையராஜா-வைரமுத்து பிரிவுக்கு காரணம்: கங்கை அமரன் விளக்கம்..

‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கங்கை அமரன் தெரிவிக்கையில்,’ கமல் இயல்பாக இருக்க மாட்டார். ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக இருப்பார். அனைவரும் இயல்பாக தான் இருக்க வேண்டும். அதுதான் நல்லது. கமலைப் பற்றி இன்னும் சொல்லலாம். ஆனால், அவர் இப்போது எம்.பி ஆகிவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ‘ஊமை விழிகள்’ படத்தின் பின்னணி இசை பார்த்த பிறகு தான் இளையராஜா தனது பின்னணி இசையில் புது ஸ்டைலை உருவாக்கினார். ‘ஹேராம்’ […]

‘இவர் உத்தமர்’ என யாருமே சொல்ல மாட்டார்கள்: சின்மயி ஃப்ளாஷ்பேக் வைரல்..

புகழ் பெற்ற பாடகியாக வலம் வரும் சின்மயி, கடந்த 2018-ம் ஆண்டு கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் ஒன்றை தெரிவித்தார். அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். அது மிகப் பெரிய அளவில் பேசுபொருள் ஆனது. இந்தப் புகார் தெரிவிக்கும் முன்புவரை சினிமாவில் முன்னணி பாடகியாக வந்த சின்மயிக்கு, மீடூ புகாருக்குப் பின் யாருமே பட வாய்ப்பு தரவில்லை. அதுமட்டுமின்றி, அவரை டப்பிங் யூனியனில் தமிழ் படங்களுக்கு டப்பிங் பேசத் […]

வள்ளுவர் மறை – வைரமுத்து உரை: நூல் வெளியீட்டுப் பதிவு

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள தகவல் காண்போம்.. தமிழ் சினிமாவில், ‘பொன் மாலைப் பொழுது’ என்ற பாடலின் மூலமாக அறிமுகமானவர் கவிஞர் வைரமுத்து. முன்னதாக ‘வைகறை மேகங்கள்’ என்ற நூலெழுதி, கவியரசு கண்ணதாசனால் பாராட்டு பெற்றவர். இந்நிலையில், தற்போது வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ அச்சுப்பணி நிறைந்துவிட்டது. எனது நாற்பதாம் நூல் இது. இதன் முன்னுரையை நான் முனைந்து எழுதியிருக்கிறேன். 13 பக்கங்களில் இயங்குகிறது எனது நீண்ட முன்னுரை. […]

வைரமுத்து நல்ல மனிதர் கிடையாது: கங்கை அமரன் தாக்கு

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ‘முத்த மழை’ என்கிற பாடலை சின்மயி பாடிய பின், தமிழ் சினிமாவில் மீண்டும் கவனம் பெறத் தொடங்கினார். சின்மயி பாடுவதற்கு ஏன் தடைவிதிக்கப்பட்டது? என்பது குறித்த விவாதங்கள் கிளம்பியுள்ளது. இந்நிலையில், சின்மயியுடன் இசையமைப்பாளர் கங்கை அமரன் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அவரிடம் வைரமுத்து மீது சின்மயி வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து, கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கங்கை அமரன், ‘வைரமுத்து தங்கமான ஆளு அவரை ஏன்மா […]