Browsing tag

story

ஹாரர் காமெடியில் உருவான ‘ரஜினி கேங்’ படத்தின் அப்டேட்ஸ்..

சிறு பட்ஜெட் படங்கள், சில நேரம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்து விடுவதுண்டு. அந்த நம்பிக்கையில் சிறு பட்ஜெட் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அவ்வகையில் ‘ரஜினி கேங்’ படம் பற்றிப் பார்ப்போம்.. ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, பிஸ்தா, உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’. இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா […]

‘காந்தா’ படத்துக்கு தடை கோரிய வழக்கு அடிப்படை ஆதாரமற்றது: ராணா பேச்சு..

துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தா’ திரைப்படம் நாளை 14-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்படம் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவுக்கு நவம்பர் 18-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தயாரிப்பு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் ராணா. ‘காந்தா’ […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு சிக்கல்..

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு தொடங்கி இருக்கிறது. இதன் தமிழக உரிமை யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. முதலில் இப்படத்தின் உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பெற்றிருந்தார். தற்போது, அவர் கூறிய மாதிரி பணத்தைக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் தவிர்த்து தமிழக உரிமையினை யாருக்கு வழங்கலாம் என்ற பேச்சுவார்த்தையில் படக்குழு இறங்கியிருக்கிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ பாணியில் ஒவ்வொரு […]

நடிகை அபிராமியின் பறக்கும் முத்தம்; யாருக்கு தெரியுமா?

‘ஐபிஎல்-இந்தியன் பெனல் லா’ என்ற படம் வருகிற 28-ந்தேதி திரைக்கு வருகிறது. கருணாநிதி இயக்கியுள்ள இப்படத்தில், நாயகனாக டி.டி.எப்.வாசன் நடித்துள்ளார். மேலும் கிஷோர், அபிராமி, குஷிதா, சிங்கம்புலி, ஹரீஸ்பெரடி, ஆடுகளம் நரேன், ஜான்விஜய், போஸ் வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் டி.டி.எப். வாசன் பேசியதாவது, ‘இது என்னுடைய முதல் படம். நான் கூச்ச சுபாவம் உள்ள பையன். […]

நடிகைகள் ரேவதி, ரஞ்சனி, ராதா குறித்து கே.பாக்யராஜ் சுவாரஸ்ய தகவல்..

‘ஐபிஎல்- இந்தியன் பீனல் லா’ திரைப்படம் வருகின்ற 28-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. கருணாநிதி இயக்கியுள்ள இப்படத்தில் கிஷோர், டிடிஎஃப் வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெரேடி, ‘ஆடுகளம்’ நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேசியதாவது, ‘நடிகை ரேவதி முதன்முதலில் என்னுடைய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் நடிப்பதற்காகத்தான் வந்தார். அவருடைய வயது கதாபாத்திரத்துக்கு பொருத்தமானதாக இல்லை. சிறிது காலம் காத்திருங்கள் என்று சொன்னேன். இந்த இடைவெளியில் எங்கள் […]

சிவாஜிகணேசன் பேரனும், கங்கை அமரனும் நடிக்கும் படத்தின் கதை..

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த திலகம் சிவாஜி கணேசன் என்பது தெரிந்ததே. இவரது மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளராகவும், தொழில் அதிபராகவும் இருக்கிறார். இவரது முதல் மகன் துஷ்யந்த், ‘ஜூனியர் சிவாஜி’ என்ற பெயரில் சில படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்நிலையில், ராம்குமாரின் 2-வது மகன் தர்ஷன் கணேசனும் சினிமாவுக்கு வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரித்து, டி.டி.பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘லெனின் பாண்டியன்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஆடு […]

இதெல்லாம் கொடுமையானது: யூடியூபர் மீது நடிகை கவுரி கிஷன் பாய்ச்சல்..

விஜய் சேதுபதி-திரிஷா நடித்து வெளியான ‘96’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவுரி கிஷன். தற்போது, இவரது நடிப்பில் ‘அதர்ஸ்’ என்ற படம் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, தனது உடல் எடை என்ன? என அநாகரிகமாக கேள்வி எழுப்பிய யூடியூபர் ஒருவரிடம், கவுரி கிஷன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. கவுரிக்கு ஆதரவாக இயக்குநர் பா.ரஞ்சித் உள்பட திரையுலகப் பிரபலங்கள் பலரும் […]

‘மிடில் கிளாஸ்’ படத்தின் கதை என்ன தெரியுமா?

அண்மையில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி, தேசிங்கு ராஜா-2, அம்பி ஆகிய படங்கள் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டவை. இதில், சசிகுமார்-சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பை பெற்றது. அவ்வகையில், நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் முனீஷ்காந்த், கதையின் நாயகனாக நடித்து வெளியாகவுள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. முனீஷ்க்கு விஜயலட்சுமி மனைவியாக நடித்துள்ளார். கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இப்படத்தில், காளி வெங்கட், ராதாரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற […]

அஜித்துடன் லோகேஷ் கனகராஜ் சந்திப்பு..

அஜித்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் படம் உருவாகுமா? இது பற்றி சித்ரா லட்சுமணன், அஜித் மற்றும் லோகேஷ் கனகராஜ் இடையே மீட்டிங் நடந்ததும், படம் பண்ணுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததும் உண்மை தான். சந்திப்பு தொடர்பாக அஜித் பாசிட்டிவாக சொன்னதாக தெரிவித்திருக்கிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் அஜித்திற்காக கதையை தயார் செய்யும் பணியில் இறங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘டிசி’ என்ற படத்தில் லோகேஷ் ஹீரோவாக நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் […]

கவின், ஆண்ட்ரியா நடித்த ‘மாஸ்க்’ படத்தின் டிரெய்லர் எப்படி?

‘பிளடி பெக்கர்’ படத்தை தொடர்ந்து கவின் நடித்து வரும் படம் ‘மாஸ்க்’. இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. டார்க் காமெடி த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார். சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக் ஆகியோரும் நடித்துள்ளனர். ஆண்ட்ரியா இப்படத்தை தயாரித்து, படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். விகர்ணன் அசோக் படத்தை இயக்கி அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் […]