கவின், ஆண்ட்ரியா நடித்த ‘மாஸ்க்’ படத்தின் டிரெய்லர் எப்படி?

‘பிளடி பெக்கர்’ படத்தை தொடர்ந்து கவின் நடித்து வரும் படம் ‘மாஸ்க்’. இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

டார்க் காமெடி த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார். சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக் ஆகியோரும் நடித்துள்ளனர்.

- Advertisement -

ஆண்ட்ரியா இப்படத்தை தயாரித்து, படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். விகர்ணன் அசோக் படத்தை இயக்கி அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

‘மாஸ்க்’ பட டிரெய்லரில், ‘ ‘எம்.ஆர்.ராதா முகமூடி, இதுவரை பார்க்காத கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா, விறுவிறுப்பான டிரெய்லர் கட் என பல சுவாரசியங்கள் இடம்பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. மிடில் கிளாஸ் பிரச்சினைகளை பேசும் வாய்ஸ் ஓவருடன் தொடங்கும் டிரெய்லர் அடுத்தடுத்து கவின், ஆண்ட்ரியாவை சுற்றி நகர்கிறது.

‘வெற்றிமாறன் மேற்பார்வை’ என்று வரும் இடத்தில் படத்தின் மீதான நம்பிக்கை அதிகமாகிறது. டார்க் காமெடி, அவை டிரெய்லரில் பயன்படுத்தப்பட்ட விதமும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

actor kavin in mask movie trailer release

 

Actor kavinMask Moviestoryஆண்ட்ரியாகவின்