Browsing tag

Rajinikanth

ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துக்காட்டு: ஏவிஎம்.சரவணன் மறைவுக்கு ரஜினி இரங்கல்..

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம். சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய திரைத்துறையின் பழமையான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் ப்ரொடக்‌ஷன்ஸ். தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஏவிஎம் தயாரித்துள்ளது. நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோரை வெள்ளித்துறையில் அறிமுகம் செய்த நிறுவனம். இதன் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனின் மகன்களில் ஒருவர் ஏவிஎம் […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் ஷாருக்கான்..

சூப்பர் ஸ்டார் ரஜினி​காந்த் நடிப்பில் நெல்சன் திலீப்​கு​மார் இயக்கி வரும் ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகுறது. இதில் எஸ்​.ஜே.சூர்​யா, சுராஜ் வெஞ்​சரமுடு, ரம்யா கிருஷ்ணன், யோகி​பாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடிக்கின்​றனர். மோகன்​லால், சிவராஜ்கு​மார் கவுரவ வேடத்​தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்​கிறது. இந்​நிலையில் இந்தி நடிகரான ஷாருக்கானும் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிக்க இருப்​ப​தாக கூறப்படுகிறது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படத்​தில் நடிக்க ஷாருக்​கானிடம் கேட்டதாக​வும் […]

‘ஜெயிலர்-2’ படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சியில் விநாயகன்..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில், ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி, மோகன்லால், சிவராஜ்குமார், மிருணா, எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் ரஜினியுடன் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக நடித்த விநாயகனும், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்திருப்பதை உறுதி செய்திருக்கிறார். இது பற்றித் தெரிவிக்கையில், ‘ஜெயிலர் 2’ குறித்து அனைவரும் கேட்டுக் கொண்டே […]

ரஜினியின் ‘எஜமான்’ – விஜய்யின் ‘காவலன்’ படங்கள் ரீ ரிலீஸ்..

ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம் ஆண்டு வெளியான படம் ‘எஜமான்’. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, நெப்போலியன், செந்தில், கவுண்டமணி, விஜயகுமார், ஐஸ்வர்யா, மனோரமா, நம்பியார் உள்பட பலர் நடித்திருந்தனர். ரஜினியின் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ஹிட். சிறுவயதில் ‘ரஜினி அங்கிள்’ […]

ரஜினியின் ‘தலைவர்-173’ பட தாமதத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருக்கும் ‘தலைவர்-173’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. பார்க்கிங்” படம் மூலம் தேசிய விருது பெற்று கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர், டான் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து NOC-க்காக தற்போது காத்துக்கொண்டு இருக்கிறார். ஏனென்றால், அவர் இதற்கு முன்பு சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. அப்படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கவிருந்தார். சில காரணங்களால் அப்படம் துவங்க தாமதமானதால் ராம்குமார் பாலகிருஷ்ணன் தற்போது ரஜினி நடிப்பில் படமெடுக்க […]

‘ஜெயிலர்-2’ படத்தின் வைரலாகும் ரஜினி புகைப்படம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தை இயக்குநர். நெல்சன் லைவ் லொகேஷனிலேயே படமாக்கியிருந்தார். அது பார்ப்பதற்கு மிக தத்ரூபமாக இருந்தது. ரசிகர்கள் ரசித்தனர். அதேபோல ‘ஜெயிலர்-2’ படத்தையும் பல லைவ் லொகேஷனில் படமெடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தில் ஒரு சண்டை காட்சியில் ரஜினி அதிக எடை கொண்ட ஒரு பொருளை தூக்கும்படியான காட்சி எடுக்கப்பட்டது. அப்போது, நெல்சன் க்ளோஸ் அப் ஷாட்டிற்கு மட்டும் ரஜினியை பயன்படுத்திவிட்டு வெயிட்டை தூக்குவதற்கு டூப்பை பயன்படுத்தலாம் என […]

ரஜினியின் ‘தலைவர்-173’ பட இயக்குநர்? ராம்குமாரின் வைரல் பேச்சு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கும் மாபெரும் வாய்ப்பை இளம் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பெற்றிருப்பதாக தெரிகிறது. இவர்தான் ‘தலைவர்-173’ திரைப்படத்தின் இயக்குநர் என கூறப்படுகிறது. ‘பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கி, வெற்றிப்படமாக கொடுத்து, தேசிய விருதையும் வென்றுள்ளார் ராம்குமார் பாலகிருஷ்ணன். அதனைத்தொடர்ந்து சிம்பு நடிப்பில் STR-49 திரைப்படத்திற்கு பூஜை நடைபெற்று, இயக்குவதற்கான பணிகளில் இருந்த ராம்குமாருக்கு ரஜினியிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினிக்கு ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை பிடித்துப்போகவே ‘தலைவர்-173’ பட இயக்குநர் […]

ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தில் இணைகிறார் சாய் பல்லவி?

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருக்கும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. ‘பார்க்கிங்’ என்ற படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர், அடுத்ததாக சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்க, பூஜையும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. ஆனால், அடுத்தாண்டு கண்டிப்பாக இப்படம் துவங்கும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு ரஜினியை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விரைவில் இதன் அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டு இத்தகவலை ரஜினியும் கமலும் உறுதிப்படுத்த வேண்டும் […]

சிம்புவை தொடர்ந்து, ரஜினியுடன் இணைகிறார் விஜய் சேதுபதி..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில், பிற மொழி பிரபலங்களான மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர். தமன்னா ‘காவாலா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபீஸில் ரூ.600 கோடி வசூலை குவித்து சாதனை படைத்தது. ஜெயிலரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இதன் 2-ம் பாக பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர் நெல்சன். முதல் பாகத்தில் நடித்த பலரும் 2-வது பாகத்தில் நடித்து வருகின்றனர். அவ்வகையில் […]

ரஜினி பிறந்த நாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதை தொடர்ந்து, ரஜினி பலரிடம் கதை கேட்டு வந்தார். கடைசியாக ‘மகாராஜா’ பட இயக்குநர் நித்திலன் சாமிநாதன் மற்றும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறிய கதைகள் ரஜினிக்கு பிடித்திருந்த்து. இதில், ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதையை தற்போது ரஜினி தேர்வு செய்திருக்கின்றார். இந்நிலையில், இது பற்றிய அறிவிப்பை தனது பிறந்தநாளில் வெளியிடலாம் என்ற முடிவிற்கு ரஜினி வந்திருப்பதாக கூறப்படுகிறது. அன்று ‘ஜெயிலர்-2’ படத்தின் […]