ரஜினி-கமல் இணையும் படம் பற்றி, இயக்குநர் சிபி உறுதி..

ரஜினி-கமல் இணைந்து நடிக்கவிருக்கும் படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ படம் வெளியாகி வெற்றி பெற்றபோது, ரஜினியை நேரில் சந்தித்திருந்தார் சிபி. அப்போதே ரஜினியிடம் ஒரு லைனை சொல்லி, ரஜினியின் அறிவுறுத்தலின் பேரில் அதை டெவலப் செய்ததாகவும் கூறப்பட்டது. அந்த சமயத்திலேயே அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என தகவல் வெளியானது.

ஆனால் வேறு சில கமிட்மென்ட்டுகளால் உடனடியாக முடிக்க வேண்டிய சூழல் இருந்ததால், அப்போது நடக்காமல் போய்விட்டதாக கூறப்பட்டது. தற்போது அந்தக் கதையில் சில மாற்றங்களை செய்து ரஜினியிடம் சிபி ஓகே வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இது குடும்பங்கள் கொண்டாடப்படும் படமாகத்தான் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில் ‘வித் லவ்’ பட ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் கலந்துகொண்ட சிபி சக்கரவர்த்தி தெரிவிக்கையில்,

‘தலைவர் 173 படத்தின் அறிவிப்பு வந்த பிறகு இப்போதுதான் எல்லோரையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த அறிவிப்பு வந்ததும் எதிர்பார்க்காத பலரிடமிருந்து எனக்கு பாராட்டு வந்தது. அதேபோல், ஒரு சிலரோ இவன் ரஜினியை வைத்து படம் செய்கிறானா என்று பதற்றப்படுகிறார்கள். எல்லோருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். தலைவர் 173 படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது எல்லோருக்குமே திருப்தியாக இருக்கும். இது சத்தியம்’ என கூறியுள்ளார்.

rajini and kamal in thalaivar173 movie updates
KamalHaasanRajinikanthstoryதலைவர் 173ரஜினி