Browsing tag

politics

அரசியல் பேசும் விஜய்யின் கடைசிப் படம்; தேர்தல் பிரசாரத்திற்கு துணைபுரியுமா?

தளபதி விஜய் நடிக்கும் கடைசிப் படத்தின் அப்டேட்ஸ் குறித்துப் பார்ப்போம்.. தளபதி விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கும் ‘தளபதி 69’ படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் ஷூட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் நிறைவடையும் எனவும், வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால், ரசிகர்கள் மட்டுமின்றி கட்சி பிரமுகர்களும் அரசியல் சார்ந்து எதிர்பார்க்கின்றனர். இப்படத்தின் ‘டைட்டில்’ மக்கள் நலன் […]

அஜித் கட்சி ஆரம்பிக்கட்டும் சொல்றேன்: நடிகர் ரமேஷ் கண்ணா பேச்சு

விஜய்யின் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு, ரமேஷ் கண்ணா சொன்ன பதில் தற்போது வைரலாகிறது. இது குறித்துப் பார்ப்போம்.. மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ பொங்கல் பண்டிகையில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் அர்ஜுன், ஆரவ் என பலர், நடித்திருக்க அனிருத் இசையமைத்துள்ளார். ‘துணிவு’ படத்திற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இதனால், ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக அஜித் தற்போது ஒரே சமயத்தில் இரண்டு […]

ரெண்டு கிழவிகள் பேசிக்கிட்டாங்க: தளபதி விஜய் கட்சி பற்றி, லியோனி விமர்சனம்..

விஜய் மீது, திண்டுக்கல் லியோனி கேலியாய் பேசிய விமர்சனம் இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: நடிகர் விஜய் அரசியலில் இறங்கி தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நிலையில், விக்கிரவாண்டியில் அவர் நடத்திய முதல் மாநாட்டிற்கு பல லட்சம் மக்கள் திரண்டனர். இதனையடுத்து, விஜய் பிற கட்சி பிரமுகர்களின் விமர்சனங்களுக்கும் தொடர்ந்து உள்ளாகி வருகிறார். இந்நிலையில், துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் […]

திமுக தனது வாக்குகளை இழக்கும்: இயக்குனர் அமீர் கணிப்பு..

இயக்குனர் அமீர், அரசியல் மற்றும் பொது நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவ்வாறு விஜய் மற்றும் திமுக குறித்து தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அது குறித்து காண்போம்.. விஜய் இப்போதுதான் அரசியல் களத்திற்கு வந்துள்ளார். இன்னும் மக்கள் பிரச்சினைகளை அவர் கையில் எடுத்து களத்திற்கு வரவில்லை. அப்படி இருக்கும்போது, விஜய்யின் அரசியல் நிலைப்பாடு இன்னும் முழுமையாக தெரியவில்லை. டங்ஸ்டன் விவகாரத்தில் விஜய்யின் நிலைப்பாடு என்ன? ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ […]

தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நடிகை பாவனா சொன்ன கருத்து

தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நடிகை பாவனா கருத்து தெரிவித்துள்ளார். அது என்ன? என காண்போம்.. மண்ணில் நடமாடும் வெள்ளை நிலா போல கொள்ளை அழகு தான் நடிகை பாவனா. சில காரணங்களால் சினியிலிருந்து ஒதுங்கியிருந்த இவர், தற்போது மீண்டும் திரையில் உலா வர இருக்கிறார். இந்நிலையில், 10 ஆயிரம் சிசிடிவிக்களை சென்னையில் பல்வேறு இடங்களில் நிறுவும் நிகழ்ச்சிக்காக, சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்டு மனம் விட்டு பேசினார். ‘சிசிடிவி கேமிராவும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. […]

‘தளபதி-69’ படத்தை இயக்கும் எச்.வினோத்திற்கு, ரசிகர்கள் கோரிக்கை: நிறைவேறுமா?

தளபதி விஜய்யின் கடைசிப் படமான ‘தளபதி-69’ பட இயக்குனர் எச்.வினோத்திற்கு, பேரார்வத்துடன் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது என்ன என காண்போம்.. விஜய், தவெக கட்சி ஆரம்பித்து, விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும் சிறப்பாக நடத்திக் காட்டி, முழங்கினார். இதனைத் தொடர்ந்து, தனது கடைசிப் படமான ‘தளபதி-69’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். அவ்வகையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘தளபதி-69’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக […]

தளபதி விஜய்யின் கடைசிப் படம் டைட்டில் அறிவிப்பு.. அப்டேட்: ரசிகர்கள் செம குஷி..

தளபதி விஜய்யின் கடைசிப் படம் தளபதி- 69. இப்படத்தை எச். வினோத் தற்போது இயக்கிக் கொண்டிருக்க, கே.வி.என். புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து, அஜித்துடன் இணைந்து பணியாற்றி வந்த எச். வினோத் தற்போது முதன்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார். இதனால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. மேலும், தளபதியின் இறுதிப்படம் என்ற அறிவிப்பினாலும் மாஸ் கூடியிருக்கிறது. இந்நிலையில் ‘தளபதி 69’ குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று […]

அடுத்த வாரம் அரசியலில் குதிக்கிறேன்: திவ்யா சத்யராஜ் அதிரடி முடிவு

நடிகர் சத்யராஜின் மகன் சிபி, சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். மகள் திவ்யா இதோ அரசியலில் இறங்கப் போகிறார். இது குறித்துப் பார்ப்போம்.. ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்யராஜ், மகிழ்மதி என்கிற பெயரில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்கி வருகிறார் திவ்யா சத்யராஜ். அவருக்கு தற்போது 31 வயது ஆகிறது. திருமணம் ஆகவில்லை. சினிமா நடிகர்களின் வாரிசு என்றாலே அவர்களுக்கு […]

நான் பாவாடையா இல்லாததால், நான் சங்கியும் கிடையாது: ஆர்.ஜே. பாலாஜி

சொர்க்கவாசல், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, இந்த படத்தில் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், இயக்குனரும் நல்ல எபெக்ட் போட்டு படத்தை எடுத்து இருக்கிறோம். இந்த படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்து, எனக்கு தேசிய விருதை பெற்றுத் தரும் என்று நான் நம்புறேன். பொதுவா ஒரு படத்தோட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில, அந்த படம் குறித்து, சர்ச்சையா பேசுனா. படம் வெற்றி பெரும் என்கிற ஒரு நிலைமை வந்திருக்கு. […]

ரஜினிகாந்துடன் இன்று திடீர் சந்திப்பு ஏன்?: சீமான் விளக்கம்..

‘ரஜினிகாந்திடம் நான் பேசியதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது’ என கூறிய சீமான்.. மற்றபடி தெரிவித்த தகவல்கள் வருமாறு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று திடீரென சந்தித்தார். ரஜினிகாந்தை சந்தித்த பிறகு பேசிய அவர், ‘நீண்ட நாட்களாக ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால், அவர் படப்பிடிப்பு என பிஸியாக இருந்ததார். நானும் கட்சிக் கூட்டம் என பிசியாக இருந்தேன். இதனால், சந்திப்பு தாமதமானது. நேற்று சந்திப்பு குறித்து […]