Browsing tag

Enna Vilai

நீதிமன்ற அனுபவம் என் நடிப்பையே மாற்றியது – நடிகை நிமிஷா சஜயன்

வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வரும் நடிகை நிமிஷா சஜயன், தற்போது சஜீவ் பழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்திற்காக மேற்கொண்ட தயாரிப்பில், உண்மையான நீதிமன்ற விசாரணைகளை நேரில் பார்த்த அனுபவம் தனது நடிப்பு அணுகுமுறையையே மாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார். படம் குறித்து பேசிய நிமிஷா சஜயன், “இதற்கு முன்பும் ஒரு திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளேன். ஆனால், ‘என்ன விலை’ எனக்கு முற்றிலும் […]

கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘என்ன விலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

இன்றைய திரைப்பட விளம்பர உலகில் பெரும்பாலான படங்களின் ஃபர்ஸ்ட் லுக் பிரபலங்கள் மூலமாகவோ அல்லது டிஜிட்டல் தளங்கள் வழியாகவோ வெளியிடப்படுவது வழக்கமாகியுள்ளது. ஆனால் இதற்கு மாறாக, ‘என்ன விலை’ திரைப்படக் குழு ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. தனுஷ்கோடி அருகே உள்ள பாலம் கிராமத்தில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வையை, அந்தக் கிராம மக்களே ஒன்றுகூடி வெளியிட்டுள்ளனர். படப்பிடிப்பு காலத்தில் தங்களை அன்புடன் வரவேற்று முழு ஒத்துழைப்பு வழங்கிய கிராம மக்களுக்கு நன்றி […]

கருணாஸ் – நிமிஷா சஜயனின் ‘என்ன விலை’ படத்திற்கு கெளரவ விருது!

நடிகர்கள் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே பெருமைக்குரிய தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்று கவனம் ஈர்த்துள்ளது. விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் படைப்புகள் மிக அரிது. குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ போன்ற விருதுகள், ஒரு படத்தின் திரையரங்க அனுபவம் எவ்வளவு வலுவாக இருக்கும் என்பதற்கான அடையாளமாக பார்க்கப்படுகின்றன. கலாமயா பிலிம்ஸ் கிதேஷ் வி வழங்கும் இப்படத்தை இயக்கியுள்ளார் சஜீவ் பழூர். […]