Browsing tag

director vetrimaaran

சிம்பு நடிக்கவிருக்கும் ‘வடசென்னை’ கதைக்களம் குறித்து வெற்றிமாறன்..

மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்து வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘வடசென்னை’ படம் தொடங்கப்பட்டபோது, முதலில் சிம்புதான் நடிப்பதாக இருந்தது. பின்பு சில காரணங்களால் நடைபெறவில்லை. அக்கதையில் தனுஷ் நடிக்க வந்தவுடன், அதனை அவருக்கு ஏற்ற வகையில் மாற்றினேன். இப்போது, சிம்பு நடிக்கவுள்ள படத்தின் கதை என்னவென்றால், முதலில் சிம்பு நடிக்கவிருந்த வடசென்னை கதை தான். ஒரே காலகட்டத்தில் வேறொரு இடத்தில் நடிப்பது மாதிரி இருக்கும். ’வடசென்னை’ படத்தில் நடித்த கதாபாத்திரங்களும் […]

வெற்றிமாறனுக்கு, மிஷ்கின் அன்புடன் கோரிக்கை..

வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாக இருந்த ‘வாடிவாசல்’ படம் குறித்த தகவல்கள் காண்போம்.. வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பேட் கேர்ள்’ படம் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து மிஷ்கின் தெரிவிக்கையில், ‘சூர்யாவும், வெற்றிமாறனும் இணைந்தால், நமக்கு ஒரு சிறப்பான படம் கிடைக்கும். அப்படிப்பட்ட ‘வாடிவாசல்’ படத்தை சீக்கிரம் தொடங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்றார். பேர்ட் கேர்ள் தயாரிப்பாளர் வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘இப்போதைக்கு ‘வாடிவாசல்’ படம் குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது. இரண்டு […]

வெற்றிமாறன்-சிம்பு இணைந்த திரைப்படம் குறித்து, இயக்குநர் நெல்சன் சூசக தகவல்..

சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் ஒரு ப்ரோமோ வீடியோவை ஷூட் செய்திருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இயக்குநர் நெல்சனும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்துள்ளார். இது குறித்து நெல்சனிடம் , சிம்பு -வெற்றிமாறன் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, ‘நீங்க என்ன எல்லாத்தையும் எங்கிட்டே கேட்குறீங்க, இதெல்லாம் ரகசியம், சொல்லக்கூடாது. இதைச் சொல்ல எனக்கு அனுமதியும் கிடையாது’ என கூறினார். இதன் மூலம் சிம்பு, வெற்றிமாறன் படத்தில் நெல்சன் நடிக்கின்றார் என்றே தெரிகின்றது. ஏற்கனவே வெளியான தகவலின்படி […]

சிம்பு நடிப்பில் உருவாகும் படம் குறித்து, வெற்றிமாறன் அறிவிப்பு..

வெற்றிமாறன்-சிம்பு இணைந்துள்ள படத்தின் தகவல்கள் காண்போம்.. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் STR 49 என்ற திரைப்படம் தயாராகவிருந்தது. இதற்கான ப்ரோமோ ஷூட் கூட நடத்தப்பட்டது. அந்த ப்ரோமோவின் மூலம் இப்படத்தின் அறிவிப்பை வெளியிடலாம் என படக்குழு முடிவெடுத்திருந்தது. ஜூலை மாதமே இதன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்குள் சில சிக்கல்கள் ஏற்பட்டதாக தெரிகின்றது. அதன் விளைவாக இன்றுவரை இப்படத்தின் அறிவிப்பு வரவில்லை. தயாரிப்பாளர் மாறலாம், ஹீரோ மாறலாம் என்பது போன்ற […]

வெற்றிமாறன்-சிம்பு இணைந்த புதிய படம் கைவிடப்பட்டதா?

வெற்றிமாறன் இயக்கத்தில், ‘வடசென்னை’ கதைக்களத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை வெற்றிமாறன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியான வீடியோ பதிவில் உறுதிப்படுத்தி இருந்தார். இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. இந்தக் கூட்டணி முயற்சிக்கு காரணமானவர் தாணு என்பது நினைவுகூரத்தக்கது. தற்போது சிம்பு – வெற்றிமாறன் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. சிம்புவிடம் சம்பளப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடையாத காரணத்தினால், இப்படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. ஏனென்றால் சம்பளம், படத்தின் பட்ஜெட் உள்ளிட்டவற்றை கணக்கிட்டபோது, உரிமைகள் விற்பனையின் மூலம் […]

வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பட வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. கோபி நயினார் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து, இபபடம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாநில அரசை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டு படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது. […]

சிம்பு நடிக்கும் ‘வடசென்னை’ படம்: வெற்றிமாறன் அதிரடி முடிவு..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்திருந்தார் சிம்பு. இப்படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை குவித்திருந்தாலும், எஸ்டிஆரின் கதாபாத்திரம் பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை குவித்தது. இதனையடுத்து, வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்தார். இவர்கள் இணையும் படத்துக்கான ப்ரொமோ ஷுட்டிங்கும் துவங்கி நடைபெற்றது. ஆனால், பட்ஜெட் காரணமாக படத்தினை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிம்பு நடிப்பில் உருவாகும் படத்தினை […]

வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படம் தாமதம்; சிம்பு எடுத்த அதிரடி முடிவு..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்து பாராட்டுக்களை குவித்திருந்தார் சிம்பு. பின்னர், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பணிகள் துவங்கப்பட்டது. இதனால், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘எஸ்டிஆர் 49’ தள்ளிப்போனது. இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் பணிகள் பட்ஜெட் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடசென்னை கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில், எஸ்டிஆர் கேங்ஸ்டராக சிம்பு நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்காக ப்ரொமோ ஒன்றின் ஷுட்டிங்கையும் […]

வெற்றிமாறன் தயாரித்த படத்தில், 37 காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு..

‘எம்பிரான்’ படத்திற்கு வந்த சோதனையைப் போல, தற்போது ‘மனுஷி’ படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இப்படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் உள்ளதாகக் கூறி அந்த காட்சிகள், வசனங்களை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிமாறன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது வெற்றிமாறன் […]

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்துக்கு, அரங்குகள் அமைக்கும் பணி..

வாடிவாசல் படம்போல, வடசென்னை படமும் கேள்விக்குறி ஆகிறதா? என பார்ப்போம்.. ‘விடுதலை 2’ படத்துக்குப் பின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவதாக இருந்தார் வெற்றிமாறன். அப்படம் தள்ளிப் போகவே சிம்பு நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இந்தக் கூட்டணி புதுமையாக இருக்கிறதே என்று பலரும் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால், இக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அது வதந்தி என கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதற்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் […]