சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் ஒரு ப்ரோமோ வீடியோவை ஷூட் செய்திருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இயக்குநர் நெல்சனும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்துள்ளார்.
இது குறித்து நெல்சனிடம் , சிம்பு -வெற்றிமாறன் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, ‘நீங்க என்ன எல்லாத்தையும் எங்கிட்டே கேட்குறீங்க, இதெல்லாம் ரகசியம், சொல்லக்கூடாது. இதைச் சொல்ல எனக்கு அனுமதியும் கிடையாது’ என கூறினார்.
இதன் மூலம் சிம்பு, வெற்றிமாறன் படத்தில் நெல்சன் நடிக்கின்றார் என்றே தெரிகின்றது. ஏற்கனவே வெளியான தகவலின்படி சிம்பு, வெற்றிமாறன் படத்தில் ஒரு இயக்குனராகவே நெல்சன் நடிப்பதாக சொல்லப்பட்டது. முக்கியமான கேமியோவில் நடிப்பதாகவும் தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து, நெல்சன் பேசுவதை வைத்து கணிக்கையில், அவர் சிம்பு, வெற்றிமாறன் படத்தில் நடிக்கின்றார் என்றே தெரிகின்றது. அதாவது, கடந்த சில வாரங்களாக படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவி வந்தன. தற்போது இப்படம் நடக்கும் என்றே தெரிவதாக சிம்பு ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது.
இச்சூழலில், தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள STR 50 தாமதமாகும் என தகவல்கள் வருகின்றன. அதேபோல ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்த படமும் தாமதமாகிறது.
இதனால், வெற்றிமாறன்- சிம்பு நடிப்பில் இயக்கப்போகும் படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டு வெளியிடப்படும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தை சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். விரைவில் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.