Browsing tag

court order

பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்கவில்லை: மஞ்சு வாரியார் ஆதங்கம்..

மலையாள சினிமாவில் பிரபல நடிகைக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தொடர்புடைய மற்ற 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை மஞ்சு வாரியார் தெரிவிக்கையில், ‘நடிகையின் பாலியல் வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. அவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அந்த செயலை திட்டமிட்டு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடி வருகின்றனர். ஆகவே, உரிய நீதி கிடைக்கவில்லை. எனவே, சதித் திட்டம் […]

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை: பிரபல நடிகை மேல்முறையீடு..

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த கும்பல் கேரவனை தடுத்து நிறுத்தி, அதன் உள்ளே அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்த நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது. இதுகுறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் மாநில குற்றப்புலன் விசாரணை பிரிவு போலீசார் விசாரித்து பல்சர் சுனில் என்கிற சுனில்குமார் என்பவர் உள்பட சிலரை போலீசார் […]

நடிகை லட்சுமி மேனன் மீதான வழக்கு ரத்து..

கேரளாவை சேர்ந்த நடிகை லட்சுமி மேனன். தமிழில் கும்கி, வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், கொச்சி அருகே ஆலுவா நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி எர்ணாகுளம் பானர்ஜி சாலையில் உள்ள மதுபாருக்கு லட்சுமி மேனன் தனது 4 நண்பர்களுடன் சென்றதாக தெரிகிறது. அங்கு, ஆலுவாவை சேர்ந்த ஐ.டி .ஊழியரான ஷா சலீம் என்பவர் நண்பர்களுடன் மது அருந்த வந்தார். அப்போது அவருக்கும், லட்சுமி மேனனுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஷா […]

சிரஞ்சீவியின் புகைப்படம், குரலை பயன்படுத்த கோர்ட் தடை..

இணைய தளங்களில் தங்களது பெயர் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, திரைப் பிரபலங்கள் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், கரண் ஜோஹர், நாகார்ஜுனா, அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், ஆஷா போன்ஸ்லே உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவியும் ஐதராபாத், சிட்டி சிவில் நீதிமன்றத்தில், தனது அடையாளம் மற்றும் புகழை, அதிகாரப் பூர்வமின்றி வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவதற்குத் தடை […]

எனது உரிமைகளை பாதுகாத்ததற்காக நீதித்துறைக்கு நன்றி: நடிகர் நாகார்ஜுனா..

அறிவியல் தொழில் நுட்பம் அதிநவீனமாய் வளர்ந்து வருகிறது. இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துபவரும். அருவருக்கத்தக்க வகையில் கையாள்பவரும் உண்டு. அவ்வகையில் இதோ ஒரு வழக்கு.. நாகார்ஜுனா அவரின் பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை அவரின் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நடந்தது. அப்போது நாகார்ஜுனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நடிகரை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோ பரப்பப்பட்டு பணமாக்கப்படுகிறது. ஏஐ மாடல்களைப் பயிற்றுவிக்கக் கூட நடிகர் நாகர்ஜுனாவின் […]

நடிகை ஸ்வேதா மேனனுக்கு எதிரான வழக்கு: கோர்ட் தடை நீட்டிப்பு..

தமிழ் சினிமாவில் நான் அவனில்லை 2, துணை முதல்வர், சிநேகிதியே, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர், கேரள மாநில நடிகர் சங்கமான ‘அம்மா’வின் தலைவராக தற்போது உள்ளார். முன்னதாக மோகன்லால் இருந்தார். ஸ்வேதா மேனன், திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் பணத்துக்காக ஆபாசமாக நடித்ததாகவும் அக்காட்சிகளை சமூக ஊடகங்கள், ஆபாச தளங்களில் வெளியிட்டு வருமானம் ஈட்டியதாகவும் சமூக ஆர்வலர் மார்ட்டின் மெனச்சேரி என்பவர், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்தார். […]

ஆபாசமாக சித்தரிப்பு: ஐஸ்வர்யாராயை தொடர்ந்து, அபிஷேக்பச்சனும் வழக்கு..

ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து, அபிஷேக் பச்சனும் தனது படங்கள் மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது பெயர், படம் மற்றும் போலி வீடியோக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் அபிஷேக் பச்சன் வழக்கு தொடர்ந்துள்ளார். அபிஷேக் பச்சன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரவீன் ஆனந்த், அபிஷேக் பச்சனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஏஐ மூலம் சிலர் உருவாக்கி வருவதாகவும், […]

நடிகர் சங்கத்தேர்தல் தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவு..

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் முடிவுகளின்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறி, […]

ஆபாசமாக சித்தரிப்பு: நடிகை ஐஸ்வர்யாராய் வழக்கு..

அறிவியல் வளர்ச்சி ஆக்கப்பூர்வமாகவும், நல்வழிப்படுத்தும் வகையிலும் அமைய வேண்டும். ஆனால், இன்றைய சூழலில் அது ஆபாசமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், இதோ ஓர் வழக்கு.. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதாகவும், அதை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவருடைய வழக்கறிஞர் சந்தீப் சேத்தி தாக்கல் செய்த வழக்கில், ‘மார்பிங் செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் […]

ரவிமோகனின் சொத்துகளை முடக்க மனு தாக்கல்: நீதிமன்றம் அனுமதி..

ரூ.6 கோடி விவகாரம் தொடர்பாக, நடிகர் ரவிமோகன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் விவரம் காண்போம்.. படத்தில் நடிக்க முன்பணமாக பெற்ற ரூ. 6 கோடியை திருப்பி செலுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாத நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்கும் வகையில், மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிட்டெட் என்ற படத் […]