Browsing tag

court order

‘த கேரளா ஸ்டோரி-2’ படத்தை வெளியிட ஐகோர்ட் தடை..

‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், படத்தின் வெளியீட்டுக்கு தடை விதித்துள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், இப்படத்தை பிப்ரவரி 27-ந்தேதி வெளியிட முடியாது என்று உத்தரவிட்டார். மேலும், தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அது ‘விதிகளுக்குக் கீழ்ப்படியவில்லை’ என்றும் கூறியது. இதற்கிடையில், படத்தின் வெளியீட்டைத் தடை செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் […]

விஜய்க்கு ரூ 1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும்: கோர்ட் உத்தரவு..

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ படம் சென்சார் பிரச்சினையில் உள்ளது. இது பற்றி நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சூழலில் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் பற்றிய தகவல்கள் காண்போம்.. கடந்த 2015-16 ஆம் நிதி யாண்டில் ரூ.35 கோடியே 42 லட்சத்து 91,890 என நடிகர் விஜய் வருமான வரிக் கணக்கு காட்டியிருந்தார். அதை மதிப்பீடு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், விஜய் வீட்டில் 2015-ம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் […]

‘ஜனநாயகன்’ ரிலீஸ் வழக்கில், மறுபடியும் சிக்கல்..

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத்தயாரிப்பு குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, இப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து, உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் […]

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகனுக்கு, முதல்படமான ‘நாளைய தீர்ப்பு’..

விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து பலர் தங்களின் கருத்துகளை கூறியிருக்கும் நிலையில், தயாரிப்பாளர் ராஜன் கூறியதாவது, ‘விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்தது தான் பிரச்சினை. அவர் சினிமாவிலேயே இருந்திருந்தால் ஜனநாயகன் படத்திற்கு இப்படி ஒரு கொடுமை நடந்திருக்காது. அவர் அரசியலில் குதித்தது, அதுவும் அவர் யாருடனும் கூட்டணி அமைக்காமல் இருப்பது தான் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம். […]

‘ஜனநாயகன்’ ரிலீஸ் வழக்கில் வரும் 27-ந்தேதி தீர்ப்பு..

விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை, ஜனவரி 9-ந்தேதி வெளியிடத் தயாரிப்புக் குழு திட்டமிட்டது. எனினும், மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்து மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதால், சிக்கல் ஏற்பட்டது. இதை எதிர்த்துப் படத் தயாரிப்புக் குழு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ஜனவரி 9-ஆம் தேதி, தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து, ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாகச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை […]

‘ஜனநாயகன்’ படத்திற்கு நேர்ந்த புது நெருக்கடி..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு தரப்பு வாதங்களை முன்வைத்தது. அப்போது படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள அமேசான் ப்ரைம் நிறுவனம் நெருக்கடி கொடுப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை என்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனநாயகன் பட நிறுவனத்துக்கு அமேசான் வீடியோ தெரிவித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனால், ஜனநாயகன் படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை […]

‘ஜனநாயகன்’ ரிலீஸ் வழக்கு: இன்றைய விசாரணை விவரம்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மேல்முறையீடு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் தரப்பில், சான்றிதழ் வழங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஜனவரி 6-ந்தேதியில் சென்சார் போர்டு தலைவர் பிறப்பித்த முடிவையும், தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். ஆனால், தயாரிப்பாளர் அந்த கோரிக்கையையே முன்வைக்கவில்லை. ஒரு படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்துள்ளது. படத்திற்கு சான்றிதழ் […]

கெட்ட நோக்கத்துடன் தணிக்கை வாரியம்: ‘ஜனநாயகன்’ படக்குழு கோர்ட்டில் வாதம்..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஜனவரி 9-ந்தேதி வெளி​யிட திட்​ட​மிட்​டிருந்​தனர். ஆனால், படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்க மறுத்த மத்​திய தணிக்கை வாரி​யம், படத்தை மறுஆய்​வுக்கு அனுப்​பியது. இதை எதிர்த்து கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிப்பு குழு தரப்​பில் உயர் நீதி​மன்றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜன​நாயகன்’ படத்தை மறுஆய்வு குழு​வுக்கு பரிந்​துரை செய்த தணிக்கை வாரிய தலை​வர் உத்​தரவை ரத்து செய்​தார். இந்த உத்​தரவை […]

தங்கக்கடத்தல் வழக்கில் நடிகை ரன்யாராவ்: கோர்ட் அதிரடி உத்தரவு..

துபாயில் இருந்து கடந்த மார்ச் மாதம் தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. விசாரணைக்கு பின்பு நடிகை ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவரது காதலன் தருண் என்பவர் உள்பட மேலும் சிலர் இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்கள். இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. வருவாய் நுண்ணறிவு பிரிவு […]

‘குட் பேக் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்கள் வழக்கு, கோர்ட் முடித்து வைப்பு..

அஜித் தற்போது மலேசியாவில் கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், இவரது நடிப்பில் ஆதிக் இயக்கி வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில், தன் அனுமதியில்லாமல், ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’ ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்தது சென்னை உயர் நீதிமன்றம்.’ விசாரணையில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. […]