Browsing tag

court order

பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: தீர்ப்பு என்ன?

பிரபல நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நீதிமன்ற விசாரணை பற்றிக் காண்போம்.. கேரளாவில் 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி என்பவர், நடிகர் திலீப் தூண்டுதலின் பேரிலேயே நடிகையை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக […]

‘ஜகஜால கில்லாடி’ பட விவகாரம்: சிவாஜி கணேசன் வீடு ஜப்தி-ஐகோர்ட் உத்தரவு

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுவிஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த […]

அமலாக்கத்துறையின் நடவடிக்கை, அதிகார துஷ்பிரயோகம்: இயக்குனர் ஷங்கர் வருத்தம்

‘எந்திரன்’ படம் தொடர்பாக எடுத்துள்ள அமலாக்கத்துறையின் நடிவடிக்கை பற்றி இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ள தகவல் காண்போம்.. ‘எந்திரன்’ திரைப்படம் தான் எழுதிய ஜுகிபா என்கிற கதையை திருடி எடுக்கப்பட்டதாக ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜுகிபாவுக்கும் ‘எந்திரன்’ படத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளதாக நீதிமன்றமே தெரிவித்ததால் அதை எதிர்த்து ஷங்கர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சில தினங்களுக்கு முன் இந்த வழக்கை காரணம் […]

உதயநிதி மீது தயாரிப்பாளர் போட்ட வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

‘ஏஞ்சல்’ திரைப்படம் தொடர்பாக பதிலளிக்க உதயநிதிக்கு ஜகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘உதயநிதி கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018-ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியதாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். 20 சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள […]

தயாரிப்பாளரின் வீட்டை இடித்த விவகாரம்: நடிகை கவுதமிக்கு கோர்ட் நோட்டீஸ்

சென்னை ஐகோர்ட் நடிகை கவுதமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம். நடிகை கவுதமிக்கு எதிராக அழகப்பனின் மனைவி நாச்சாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வருமாறு: ‘நாங்கள் சிறையில் இருந்து வெளியே வருவதற்குள் எங்களது வீடு சட்டவிரோதமாக இடிக்கப்பட்டிருக்கிறது.எங்களது வீட்டை இடித்ததால் ஏற்பட்ட இழப்பு மற்றும் மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 கோடியை வழங்க வேண்டும் என கவுதமிக்கு உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கவுதமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. […]

ஐஸ்வர்யா ராய் மகள் குறித்து அவதூறு செய்தி: கூகுள், யூடியூப் நிறுவனங்களுக்கு கோர்ட் நோட்டீஸ்..

நடமாடுற 50 கிலோ எடைகொண்ட தாஜ்மஹால் தான் ஐஸ்வர்யா. இந்த ஸ்லிம்மான பேரழகியின் செல்ல மகள் ஆராத்யா பற்றிய தவறான தகவல்களை நீக்கக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் முக்கிய விஷயத்தை வலியுறுத்தியுள்ளது. நட்சத்திர ஜோடியான, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஜோடியின் மகள் ஆராத்யா தன்னைப் பற்றியும், தன் உடல்நலம் தொடர்பான செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தாய் – தந்தையின் […]

ஆவணப்பட விவகாரம்: நயன்தாரா அணிந்த ஆடைகளுக்கும் காப்புரிமை வேண்டும்: தனுஷ் தரப்பு அதிரடி வாதம்..

தனுஷ்-நயன்தாரா இடையே நடைபெற்று வரும் ‘ஆவணப்பட விவகாரம்’ குறித்த விசாரணை நடைபெற்றது. இது தொடர்பாக எழுந்த காரசார விவாதங்கள் பார்ப்போம்.. தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ், ‘கடந்த 2015-ம் ஆண்டு ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரம் மற்றும் ஆடைகள் மீதும் காப்புரிமை பெற்றுள்ளது என்றும், அந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நயன்தாரா, நெட்ஃபிக்ஸ் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் “28 வினாடிகள்” காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளார். இதன் மூலம் […]

வடிவேலு மீது அவதூறான பேச்சு: சிங்கமுத்துவுக்கு கோர்ட் உத்தரவு..

பல படங்களில் இணைந்து நடித்து, அனைவரையும் சிரிக்க வைத்த இருவர், தற்போது ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு கோர்ட் வரை வந்த விஷயம் வருமாறு: நடிகர் சிங்கமுத்துவுக்கும் வடிவேலுக்கும் சில மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து, சிங்கமுத்து, வடிவேலு குறித்து மோசமாக பேசி வந்தார். சிங்கமுத்து பேசியது மீடியாவில் பெரும் பேசுபொருளானதைத் தொடர்ந்து, நடிகர் வடிவேலு, தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்கும்படி, நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாக […]