Browsing tag

court order

விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படம் வெளியீடு தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவு..

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தில், தமிழீழ மக்களை இழிவுபடுத்தும் வகையில், தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, திரையரங்குகளுக்கு […]

‘பேர்ட் கேர்ள்’ டீசரை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ‘பேர்ட் கேர்ள்’ டீசர் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பார்ப்போம்.. மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ், ராம்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 26.1.2025-ல் யூடியூப், இணையத்தில் ‘பேட் கேர்ள்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் பதின்ம வயதினர் பற்றி தவறாக சித்தரிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த டீசர் தற்போதும் ஆன்லைனில் உள்ளது. இது போன்ற காட்சிகள் குழந்தைகள் ஆபாசம், குழந்தை பாலியல் […]

நடிகை ரன்யாவுக்கு, மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு..

நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கத்தை துபாயில் இருந்து சட்டவிரோதமாக கடத்தியதற்காக அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், அவர் வெளிநாட்டுச் செலாவணி மேலாண்மைச் சட்டம் மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார். மார்ச் மாதம், ரன்யா ராவ் துபாயிலிருந்து பெங்களூரு வந்தபோது, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 14.2 […]

ரூ.9 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: கோர்ட்டில் ரவிமோகன் வழக்கு..

கோவையைச் சேர்ந்த பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம், இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்த நிலையில், ஒப்பந்தப்படி படப்பிடிப்பை துவங்காததால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஒப்பந்தப்படி, 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 80 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிய போதும், இதுவரை படப்பிடிப்பை துவங்காததால் தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போனதாகக் […]

வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சிங்கமுத்துவுக்கு அபராதம்

திரையில் சிரிக்க வைத்தவர்கள் இவர்கள்; தற்போது சிந்திக்கவும் வைத்துள்ளார்கள். அதாவது, சிங்கமுத்துவுக்கு எதிராக, வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சிங்கமுத்துவுக்கு ரூ.2500 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், ‘சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட […]

கமல் மீது கோர்ட் கடும் சாடல்: ‘தக் லைஃப்’ ரிலீஸ் தொடர்பாக சமாதான கடிதம்..

கர்நாடக வர்த்தக சபைக்கு, கமல்ஹாசன் எழுதியுள்ள அவசர கடிதம் காண்போம்.. தமிழில் இருந்து தான் கன்னடம் உருவானது என கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில் பேசியது சர்ச்சையாக வெடித்தது. கமல் மன்னிப்பு கேட்காவிட்டால், தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியிடப்படாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது. கமலும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறியிருந்தார். இதையடுத்து, தக் லைஃப் படத்திற்கு கர்நாடகாவில் அனுமதி கோரி கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று […]

‘தக் லைஃப்’ பட ரிலீஸ் விவகாரம்: இன்று நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு என்ன?

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படம் ரிலீஸாகுமா? என்பதை இன்று கோர்ட் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கர்நாடக திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் நரசிம்மலு கூறும்போது, நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கமல்ஹாசன் உறுதியாக கூறுகிறார். ஆனால், அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், படத்தை வெளியிட அனுமதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. சினிமாத் துறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, கர்நாடக அரசியல் தலைவர்களும் கன்னட அமைப்புகளும் அவரது கருத்தை கண்டித்துள்ளனர். திரையரங்குகளும் […]

எனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும்: ஆர்த்தி..

ரவிமோகன் இன்று குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள தகவல் காண்போம்.. ரவிமோகன் தன்னுடைய நீண்ட நாள் தோழியான ஆர்த்தியை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆர்த்தியிடம் இருந்து பிரிவதாக ரவி அறிவிப்பு வெளியிட்டார். பெயரையும் மாற்றிக்கொண்டார். ஆர்த்தியை பிரிவதாக தெரிவித்த ரவி மோகன் விவகாரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இருதரப்பும் சமரசமாக செல்லும் வகையில், நீதிமன்றத்தில் […]

நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

ரன்யா ராவ், தமிழில் ‘வாகா’ படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தவர். தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், டிஜிபி-யின் வளர்ப்பு மகள் ஆவார். இவரது இரு நண்பர்கள் மீதும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், ரன்யா ராவ், அவரது நண்பர்களான நடிகர் தருண் மற்றும் சாஹில் ஜெயின் ஆகியோர் ஒரு வருடம் ஜாமீன் இல்லாமல் சிறையில் இருக்க நேரிடும். கடந்த மார்ச் மாதம் துபாயிலிருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள 14.1 கிலோ […]

காப்புரிமை விதிமீறல்: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த கோர்ட் உத்தரவு

காப்புரிமை சட்டப்படி, ஏ.ஆர்.ரகுமானுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ஆஸ்கர் புகழ், இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் காப்புரிமை விதிமீறல் சர்ச்சையில் சிக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இதைத் தொடர்ந்து, பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் 2023-ல் வெளியானது. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், […]