Browsing tag

actor suriya

‘ரெட்ரோ’ தொடர்ந்து சூர்யா 46-வது படம் மற்றும் ‘வாடிவாசல்’ ஷூட்டிங் அப்டேட்ஸ்

சூர்யா நடிக்கும் 46-வது படத்தின் தகவல்கள் காண்போம்… சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1-ந்தேதி ரிலீஸாகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் தெரிவிக்கையில், ‘காதலும் மோதலும் நிறைந்த கதை. படத்தில் சூர்யாவை நியு லுக்கில் காணலாம், ரசிப்பீர்கள்’ என்றார். அவ்வகையில், ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ப்ரீ […]

நன்னாருக்கு ஒங்க வொர்க்கு: ‘ரெட்ரோ’ சந்தோஷ்க்கு, சூர்யா ஃபேன்ஸ் பாராட்டு

‘ரெட்ரோ’ படத்தின் ‘கன்னிமா’ பாடல் எவ்வாறு உருவானது என்பது குறித்துப் பார்ப்போம்..வாங்க.. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ரெட்ரோ. படம் வருகிற மே1-ந் தேதி ரிலீஸாகிறது. சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாகியுள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர். இது காதலும், மோதலும் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் படமென இயக்குனர் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளதற்கு சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் முக்கிய காரணம். […]

என் கண்ணாடிப் பூவுக்கு நன்றி: நெஞ்சம் நெகிழ்ந்த சூர்யா வாய்ஸ், வைரல்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் இசை- டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சூர்யா பேசிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இது பற்றிக் காண்போம்.. ‘ரெட்ரோ என்பது நாம் கடந்து வந்த காலத்தை குறிக்கும் சொல். நான் கடந்து வந்த இந்த 25, 30 ஆண்டுகளை என்னால் மறக்கவே முடியாது. கார்த்திக் சுப்பராஜின் முதல் படத்தில் இருந்தே அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இப்போது அவருடன் சேர்ந்து பணியாற்றும் […]

சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ டிரெய்லர் இன்று வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ டிரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாக இணைந்துள்ளார். மேலும், ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ‘ரெட்ரோ’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 2.48 […]

ஆக்‌ஷன் ஜானரில் காதலிக்கும் ஸ்டூடண்ட் சூர்யா: ‘ரெட்ரோ’ பற்றி கார்த்திக் சுப்பராஜ்

மே 1-ந்தேதி ரிலீஸாகும் ‘ரெட்ரோ’ பட அப்டேட் பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் ‘ரெட்ரோ’ ஷுட் முடிவடைந்து வரும் மே 1-ந்தேதி வெளியாகிறது. இப்படம், தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என நம்பிக்கையாக இருக்கின்றார் சூர்யா. இந்நிலையில் ‘ரெட்ரோ’ பற்றிப் பேசிய கார்த்திக் சுப்புராஜ், ‘இப்படம் காதல், காமெடி, ஆக்சன் என மூன்றும் சேர்ந்த கலவையாக இருக்கும். காதலை கதைக்களமாக கொண்டு உருவாக்கியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ‘ரெட்ரோ’ படத்தின் […]

கலக்கப் போவது யாரு?: சூர்யா-45 படத்தில் மேலும், ஒரு மலையாள நடிகை என்ரி

சூர்யா நடிக்கும் 45-வது படத்தின் அப்டேட் பார்ப்போம்.. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா-45 படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகிய பிறகு, சாய் அபயங்கர் கமிட் ஆகி வொர்க் நடைபெறுகிறது. சாய், பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஜோடியின் மகன் ஆவார். சூர்யா-45 படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அட்லீ இயக்கிய படங்களுக்கு கேமராமேனாக இருந்த விஷ்ணு, இப்படத்தில் பணியாற்றுகிறார் ‘ஆறு’ படத்திற்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மலையாள நடிகை […]

வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் குறித்து, தயாரிப்பாளர் தாணு அப்டேட்

‘அந்த 25 நிமிடங்கள் போதும்’ என வெற்றிமாறனிடம் நான் சொன்னேன் என்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ஜல்லிக்கட்டுப் போட்டியை பின்னணியாக கொண்டு, சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ என்ற படத்தை உருவாக்குகிறார். இக்கதை செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலாகும். ஒரு நாவலை, முன்னணி நடிகரின் நடிப்பில், பண்பாடு கெடாமல் பொருளாதார சரிவு விழாமல் திரைக்கதையாக மாற்றுவதென்பதே சாதனைதான். இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை கடந்த ஆண்டு […]

கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் நடிகர்களின் அலட்சியம்: திருப்பூர் சுப்ரமணியம் வருத்தம்

‘தமிழ் சினிமா அழிவிற்கு மாதவன் போன்றவர்கள் காரணமாகி விடக்கூடாது’ என கூறியுள்ளார் தயாரிப்பாளர். இது குறித்த விவரம் காண்போம்.. பல எதிர்பார்ப்புகளை பொருட்படுத்தாமல், ஓடிடி தளத்தில் திரைப்படத்தை நேரடியாக ரிலீஸ் செய்ய நடிகர் சூர்யா முக்கிய உதாரணமாக இருக்கிறார் என கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் ‘ஜெய்பீம்’ வெளியிடப்பட்டது. அதேபோன்று பா.ரஞ்சித் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தையும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட்டார். அப்போது திரையரங்க உரிமையாளர்கள், சூர்யா, பா.ரஞ்சித்தை கடுமையாக விமர்சித்து பேசினர். சினிமாவிற்கு அழிவு காலம் என்றும் […]

இதோ இன்னொரு திரிஷா: சூர்யா-தனுஷ்-விஷ்ணு விஷால் என விரும்பும் இளம்நாயகி..

இளம் வரவு, புது உறவு வசீகரிக்கும் தானே.! அதாவது திரிஷா-2 பற்றிப் பார்ப்போம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் வருகிற மே மாதம்-1ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படம், வெற்றிமாறனின் வாடிவாசல் படம் மற்றும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படமும் நடிகர் சூர்யா கைவசம் உள்ளது. இந்நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்களில் ஹீரோயினாக நடிக்க 23 வயது இளம்நாயகி மமிதா பைஜு […]

அண்ணன் இல்லன்னா தம்பி?: கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி..

‘அண்ணன் இல்லன்னா தம்பி’ என்ற கதையாக, ஒரு கதை ஓகே ஆகியுள்ளது. இக்கதை பற்றிப் பார்ப்போம்.. கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியாரே’ திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதையடுத்து மித்ரன் இயக்கும் ‘சர்தார்-2’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் […]