‘ரெட்ரோ’ படத்தின் ‘கன்னிமா’ பாடல் எவ்வாறு உருவானது என்பது குறித்துப் பார்ப்போம்..வாங்க..
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ரெட்ரோ. படம் வருகிற மே1-ந் தேதி ரிலீஸாகிறது. சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாகியுள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இது காதலும், மோதலும் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் படமென இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளதற்கு சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் முக்கிய காரணம். குறிப்பாக, அதிலும் ‘கன்னிமா’ பாடல் தற்போது டிரெண்டிங் பாடலாக மாறி செமையா ரீச் ஆகியிருக்கிறது.
இந்த ‘கன்னிமா’ பாடல் எப்படி உருவானது? என்பதன் பின்னணியை சந்தோஷ் நாராயணன் தெரிவிக்கையில், ‘ரெட்ரோ படத்தின் கதைக்களம் 1990 கால கட்டத்தில் நடக்கிறது. அதனால், அந்த காலகட்டத்தில் அமைந்த இசையை, படத்தில் பயன்படுத்தி உள்ளேன். குறிப்பாக கன்னிமா பாடலை, அந்த காலகட்டத்தில் வைப் செய்யப்பட்ட டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கியுள்ளேன்.
டி.ராஜேந்தர் இயக்கி இசையமைத்த 1986-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மைதிலி என்னை காதலி’. இப்படத்தில் அறிமுக பாடலாக இடம்பெற்ற ‘என் ஆசை மைதிலியே’ பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனது. அந்த எவர்கிரீன் ஹிட் பாடலை தழுவிதான் கன்னிமா பாடலை உருவாக்கினேன்’ என கூறியுள்ளார்.
ஒன்றிலிருந்து இன்னொன்று, இன்னொன்றில் இருந்து வேறொன்று. இதானே கிரியேட்டிவிட்டி. அவ்வகையில், வெளிப்படையாக இசைமொழி வார்த்த சந்தோஷையும் சூர்யா ஃபேன்ஸ் ‘நன்னாருக்கு ஒங்க வொர்க்கு’ என மெச்சி வருகிறார்கள்.