சூர்யா நடிக்கவிருக்கும் ‘ரோலெக்ஸ்’ படம் குறித்த அப்டேட்ஸ் பார்ப்போம்..
பெரிய ஆரவாரத்தில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் கப்சிப் ஆனது. இந்நிலையில், ‘ரெட்ரோ’ வெளியாகி சூர்யா ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படமானது, தங்க்க்கடத்தலில் ஈடுபடும் கேங் ஸ்டார் பற்றிய கதையாகும். இப்படத்தில், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், போன்ற பிரபல நடித்துள்ளனர்.
இந்நிலையில், சூர்யா நடிப்பில் ரிலீஸ் ஆகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் பார்க்க வந்த இயக்குனர் லோகேஷ் தெரிவிக்கையில், ‘இன்னும் ‘ரெட்ரோ’ படத்தை பார்க்கவில்லை. இந்த படத்திற்கு கண்டிப்பாக எக்ஸ்பெக்டேஷன் ஜாஸ்தியாக உள்ளது. அதேபோல், படம் மிகவும் நன்றாக வந்துள்ளது என கேள்விப்பட்டேன். இது கார்த்திக் சுப்பராஜின் சார் படம். கண்டிப்பாக நன்றாகத்தான் இருக்கும்.
‘ரெட்ரோ’ படத்தை பார்க்க வேண்டும் என பல நாட்கள் காத்திருக்கிறேன். அவரை பார்க்கும் போதெல்லாம் படம் எப்படி வந்து கொண்டிருக்கிறது என கேட்டுக்கொண்டே இருப்பேன். அதேபோல், இந்த படத்தில் என் நண்பர்கள் பலர் வேலை செய்திருக்கிறார்கள்.
பொதுவாகவே கார்த்திக் சுப்பராஜின் படங்களில் வேலை செய்பவர்கள் பாதிப்பேர் என் படங்களிலும் பணிபுரிவார்கள். அதனால், அவ்வப்போது படம் குறித்த அப்டேட் தெரிந்துகொள்வேன். நான் வெயிட் பண்ணிய படங்களில் இதுவும் ஒன்று. இன்று இரவு கண்டிப்பாக படத்தை பார்த்து விடுவேன்.
சூர்யாவுடன் இணைந்து கண்டிப்பாக ‘ரோலெக்ஸ்’ இருக்கிறது. கூலி ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது. ‘ரோலக்ஸ்’ படம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. சாரும் கமிட்மெண்டில் இருக்கிறார். நானும் கமிட்மெண்டில் இருக்கிறேன். அவை முடிந்த பின் படம் துவங்கும். ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும், மிரட்டலா இருக்கும். கலக்குறோம்’ என்றார்.