ரதி வீட்டில் சிக்கிய ரோகினி, மனோஜ்.. தீபனை சந்தித்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரதி வீட்டில் ரோகிணியும் மனோஜம் சிக்கிவிட ,தீபனை சந்தித்து முத்து பேசியுள்ளார்.


siragadikka asai serial today episode update 26-07-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியின் அம்மா வந்து விஜயாவிடம் பேசுகிறார். என்னைக்கா இருந்தாலும் பிரச்சனை ஆயிடும் நீங்க கொஞ்ச நாள் கேரளால வேணா தங்கி இருக்கீங்களா அங்க எங்களுக்கு சொந்தமா பெரிய வீடு இருக்கு போட் ஹவுஸ் இருக்கு நீங்க வேணா தங்கிகொங்க என்று சொல்ல ஸ்ருதி அங்க தங்கினால் மட்டும் விட்ருவாங்களா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணா ஆன்ட்டி ஏதாவது விசாரிப்பாங்க என்று பயமுறுக்க ரவி அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது அம்மாவுக்கு நாங்க இருக்கோம் நம்ம மேல எந்த தப்பும் இல்ல என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் மனோஜ் ஷோரூம் மேல் கோபமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ரோகினி வந்தவுடன் அவருடனும் கோபமாக வெளியே செல்லுகிறார் ராணி என்னாச்சு சார் கோவமா இருக்காரு என்று கேட்க விஜயா பிரச்சனையை சொல்லுகிறார். அதற்கு ராணி பணத்தை கொடுத்து சரி பண்ண பாருங்க இது மாதிரி எல்லாம் பிரச்சனைக்கு இதுதான் சரியான முடிவு என்று சொல்ல ரோகிணியும் மனோஜிடமும் வந்து இந்த பிரச்சனையை நம்ப எப்படியாவது தீர்த்து வச்சாதான் ஆன்ட்டிக்கு என் மேல இருக்குற கோவம் போகும் அதனால நம்மை கொஞ்சம் பணம் கொடுத்து இந்த பிரச்சனையை சரி பண்ண பார்ப்போம் என சொல்ல முதலில் மனோஜ் யோசிக்க பிறகு அம்மாவும் டென்ஷனா இருக்காங்க பேசிப் பார்ப்போம் என முடிவெடுக்கின்றனர்.

முத்து கார் செட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க மீனா வருகிறார். தீபன் நம்பர் அட்ரஸ் வாங்கிட்டேன் என்று சொல்ல போன் பண்ணி நான் சொல்வது போல் சொல்லு என தீபனுக்கு மீனா போன் போட்டு ரதியின் தோழி பேசுவதாகவும் பாய்சன் குடிச்சிட்டு உயிருக்கு போராடிட்டு இருக்கிறதாகவும் சொல்ல தீபன் ரதிக்கு என்ன ஆச்சு என்று டென்ஷன் ஆகிறார். ரதி குடும்பத்தினர் உட்கார்ந்து எப்படியாவது அந்த பையனுக்கு ரதியை கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று பேசிக் கொண்டிருக்க மனோஜ் ரோகிணி வருகின்றனர். உடனே நீங்க அந்த டான்ஸ் சொல்லிக் கொடுக்கிற உங்கள் வீட்டில் இருக்கிறவங்க தானே என்று சொல்ல ஆமாம் என்று சொல்லுகிறார் ஒரு பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க தான் வந்திருக்கேன் என்று சொல்ல என்ன சொல்லுங்க என்று சொல்லுகின்றனர் உங்க பொண்ணோட கர்ப்பத்தை கலைச்சிட்டு நாங்க ஒரு லட்சம் பணம் கொடுக்கிறோம் அதை பேங்கில் போட்டுக்கோங்க என்று சொல்ல பிரதி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.

உடனே மனோஜை அடித்து சேரில் கட்டி போட்டு படுக்க வைத்து விடுகின்றனர் ரோகினையும் ரூமில் அடைத்து விட என்ன செய்வது புரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறனர். மறுபக்கம் தீப்பனுக்காக கார் செட்டில் காத்துக் கொண்டிருக்க மீனா என்னங்க இன்னும் வரவில்லை என்று கேட்கிறார். அவ உண்மையா லவ் பண்ணி இருந்தா நான் வருவேன் பொய்யா டைம் பாஸ்க்கு லவ் பண்ணி இருந்தா நான் வரமாட்டான் என்று சொல்லிக் கொண்டிருக்க தீபன் ஆட்டோவில் வந்து இறங்குகிறார். உடனே மீனா வந்து இருக்க நீங்க எங்க இருக்கீங்க என்று கேட்க நாங்க தான் ஒன்னு வர சொன்ன உடனே சொல்லுகிறார் உடனே முத்து வந்து தீபனை அடி வெளுத்து வாங்குகிறார்.

மீனா மற்றும் கூட இருக்கிறவர்கள் சொல்லியும் மற்றும் கேட்காமல் தீப்பனை அடிக்கிறார். பிறகு தீபன் என்ன சொல்லுகிறார்? முத்துவின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


siragadikka asai serial today episode update 26-07-25
26-07-25episodeserialsiragadikka asaisiragadikka asai serial today episode update 26-07-25todayupdateசிறகடிக்க ஆசைமுத்துரதிவிஜய் டிவி