பணக்கார கெட்டபில் முத்துமீனாவை பார்த்து வாயடைத்து போய் உள்ளார் விஜயா.
siragadikka asai serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ஸ்ருதி மற்றும் மீனாவிடம் நடந்த விஷயங்களை சொல்லி பர்மிஷன் கேட்கிறார் முதலில் இருவரும் எதுக்கு பொய் சொல்லணும் என்று தயங்க நம்ம குடும்பத்துக்காக தானே இப்படி பண்றோம் என்று கேட்கிறார் இது மட்டுமல்லாமல் மனோஜ்க்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு இதை பயன்படுத்திக் கொண்டால் நல்லா இருக்கோ கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க என கேட்க மீனா அவர் சம்மதிக்க மாட்டார் என்று சொன்ன உடனே மனோஜிடமிருந்து ஃபோன் வந்து அவங்க ரெண்டு பேரும் சம்மதிச்சுட்டாங்க என்று சொன்னவுடன் சந்தோஷப்படுகிறார். இதைக் கேட்டு சரி அவங்களே சமாதித்ததற்கு அப்புறம் நாங்க என்ன பண்ண முடியும் சரி என்று சொல்லிவிடுகிறார். உங்கள் அம்மாவுக்கு போன் நம்பர் குடுங்க நான் உங்க அம்மாவுக்கு போன் பண்றேன் என்று கேட்க மீனா வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். ஏற்கனவே இந்த வீட்டுக்கு வந்தாலே அவங்கள அத்தை அசிங்கப்படுத்துவாங்க இதுல அவங்க வேறயா என்று சொல்ல நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் என்றதும் நீங்க கூப்பிட்டதே போதுங்க வேணாம் என்று சொன்னால் ரோகினி நல்லவேளை இவர்களே வேணான்னு சொல்லிட்டாங்க இல்லனா அவங்களுக்கு லுக் மாத்தணும் என்று மனதில் நினைத்துக் கொள்கிறார்.
பிறகு முத்துவிற்கு மீனா பாலை எடுத்து வந்து கொடுத்துவிட்டு காலில் ஆசீர்வாதம் வாங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று முத்து கேட்க 50 கார் ஓட ஓனர் ஆச்சே என்று கிண்டல் பண்ணுகிறார்.உடனே மீனா உட்கார முத்து மீனாவின் காலை தொட மீனா எழுந்து விடுகிறார் நீங்க என்ன பண்றிங்க என்று கேட்க 50 கார் ஓனரோட பொண்டாட்டியாச்சே என்று சொல்லி சிரிக்கின்றனர். இருந்தாலும் இந்த மாதிரி பொய் சொல்லி பிசினஸ் பண்றது தப்பா இல்லையாங்க எனக்கு முதல்ல தோணுச்சு நீங்களே சரின்னு சொன்னதுக்கு அப்புறம் நானும் சம்மதிச்சுட்டேன் என்று சொல்ல எனக்கும் தப்புன்னு தான் தோணுச்சு ஆனா என்னைக்கும் இல்லாம எனக்காக இந்த உதவி பண்ணுங்க குடும்பத்துக்காக பண்ணுங்க என்று கெஞ்சும் போது அண்ணன் ஆயிட்டானே என்ன பண்றது என்று முடிவு பண்ணிட்டேன் ரோகினி நடந்துக்கிட்ட விதமும் ரொம்ப ஆச்சரியமா இருந்தது பாசமான அன்பு காட்றாங்க, எங்க வீட்ல எல்லாம் கூப்பிட்டாங்க என்றெல்லாம் சொல்ல ரெண்டு பேரும் அவங்க வேலை ஆகணும்னா எப்படி வேணா பேசுவாங்க என்று சொல்லிவிட்டு நாளைக்கு பாத்துக்கலாம் என்று சொல்லி விடுகின்றனர்.
மறுநாள் காலையில் ஹோட்டலில் டெக்கரேஷன் எல்லாம் சூப்பராக இருக்க அண்ணாமலை எல்லாரும் இருக்காங்க நம்ம வீட்டு ஆளுங்க யாரையும் காணோம் என்று தேடுகிறார் அந்த நேரம் பார்த்து விஜயா மேக்கப் உடன் வர அண்ணாமலை அவரை ரசித்துப் பார்க்கிறார் கல்யாண தப்ப கூட நீ இவ்ளோ அழகா இல்ல என்று சொல்ல விஜயா வெக்கப்படுகிறார். பிறகு ரவியும் ஸ்ருதியும் வர விஜயாவை பார்த்து ஸ்ருதி நீங்க இந்த டிரஸ்ல ரொம்ப அழகா இருக்கீங்க ஆன்டி என்று சொல்லுகிறார் நீயும் தான் அழகா இருக்கீங்க ரவி இந்த கோட்உனக்கு ரொம்ப சூப்பரா இருக்குடா என்று சொல்லுகிறார். பிறகு ரோகிணி கிளம்பி வர அவரது தோழி இன்னைக்காவது அந்த போனை எடுத்து விடுவியா இவ்வளவு செலவு பண்ணி இருக்கீங்க என்று சொல்ல கண்டிப்பா எடுக்கணும் என்று மனோஜுடன் உள்ளே இருவரும் வருகின்றனர்.
எல்லாரும் வந்துட்டாங்க ஆனா முத்து ,மீனாவ காணோம் என்று அண்ணாமலை கேட்க இவங்க நாலு பேரை பாருங்க கோடீஸ்வரர் வீட்டுல இருக்கிற மாதிரி இருக்காங்க ஆனா அவங்க ரெண்டு பேரும் வந்தா பழைய சோறு பச்சை மிளகாவும் மாதிரி இருப்பாங்க என்று கிண்டல் செய்கிறார். அந்த நேரம் பார்த்து முத்துவும் மீனாவும் உள்ளே வர அவர்களை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். பார்வதி அவங்கள கிண்டல் பண்ண ஆனா ஹீரோ ஹீரோயின் மாதிரி இருக்காங்க என்று சொல்லுகிறார். இவ்ளோ அழகு படுத்துவது எல்லாமே ரோகிணி ஆல தான் என்று பெருமையாக சொல்லி கொள்கிறார் விஜயா. முத்து அண்ணாமலையை மெதுவாக கூப்பிட்டு முதுகு சொரியனும்பா எப்படி சொரியுது தெர்ல என்று கேட்க அவர் சென்று விடுகிறார் பிறகு மீனாவை கூப்பிட்டு கோட் டைட்டா இருக்கு கொஞ்சம் சொறிஞ்சு விடு மீனா என்று சொல்ல அவரும் சொறிஞ்சு விடுகிறார்.
போனை வாங்க என்ன திட்டம் போடுகிறார்?ரோகிணியின் திட்டம் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
siragadikka asai serial episode update