நிச்சயதார்த்தம் குறித்த தகவலை வெற்றி வசந்த் வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் முத்து என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெற்றி வசந்த் காதலியுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்டு விரைவில் நிச்சயதார்த்தம் என்று தெரிவித்துள்ளார். அந்தக் காதலி வேறு யாரும் கிடையாது பொன்னி சீரியல் நடிகை வைஷாலி தான்.
அவர் வெளியிட்ட பதிவில், இந்த வாரத்திற்குள் நாங்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்யப் போகிறோம் என்பதை உங்களுக்கு சொல்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் ஆசிர்வாதங்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் முன்கூட்டியே நன்றி.
மேலும் இனிய இரண்டாவது மாத காதல் ஆண்டு வாழ்த்துக்கள் மா, என்று வைஷாலிக்கு வாழ்த்து தெரிவித்து, லவ் யூ என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் செம ஜோடி என்றும் கியூட் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இவர்களது நிச்சயதார்த்தத்திற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.