வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படம் தாமதம்; சிம்பு எடுத்த அதிரடி முடிவு..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்து பாராட்டுக்களை குவித்திருந்தார் சிம்பு. பின்னர், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பணிகள் துவங்கப்பட்டது. இதனால், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘எஸ்டிஆர் 49’ தள்ளிப்போனது.

இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் பணிகள் பட்ஜெட் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடசென்னை கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில், எஸ்டிஆர் கேங்ஸ்டராக சிம்பு நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக ப்ரொமோ ஒன்றின் ஷுட்டிங்கையும் நடத்தினார் வெற்றிமாறன். மேலும், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் இந்த ப்ரொமோவில் நடித்துள்ளார. இப்படம் உருவாகவிருந்த நிலையில், சில காரணங்களால் தாமதமாகிறது.

இதனிடையில், எஸ்டிஆர் தற்போது ராம்குமார் பாலகிருஷணன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த படத்தின் பணிகளை உடனடியாக துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘பார்க்கிங்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ராம்குமார் பாலகிருஷ்ணன், முதல் படத்தின் வாயிலாகவே கவனம் ஈர்த்தார்.மேலும், ‘பார்க்கிங்’ படம் 3 தேசிய விருதுகளை வென்று வியக்க வைத்தது. சிறந்த தமிழ்ப் படம், சிறந்த திரைக்கதைக்காக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் சிறந்த துணை நடிகருக்காக எம்.எஸ். பாஸ்கர் வென்றது பார்க்கிங்.

இந்நிலையில், சிம்பு, ராம்குமார் இணையும் படம் உடனடியாக துவங்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. மேலும், இப்படத்துக்கான இசைப் பணிகளை சாய் அபயங்கர் துவங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

கல்லூரி பின்னணியில் உருவாகும் இயக்கும் படத்தில் விண்டேஜ் சிம்புவை பார்க்கலாம் என ராம்குமார் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். மேலும், இப்படத்தில் சந்தானமும் முக்கியமான ரோலில் நடிக்கவிருக்கிறார்.

simbu takes new decision abou his next film
'பார்க்கிங்' படம்actor simbudirector vetrimaaranvadachennai movieவெற்றிமாறன்