‘சிக்மா’ படப்பிடிப்பு நிறைவு: கதைக்களம் பற்றி ஜேசன் சஞ்சய் அப்டேட்ஸ்..

விஜய்​யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குந​ராக அறிமுகமாகும் ‘சிக்​மா’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்ஷன் அட்​வென்​சர் காமெடி திரைப்​பட​மான இதில் சந்​தீப் கிஷன் கதா​நாயக​னாக நடிக்​கிறார். அவருடன் ஃபரியா அப்​துல்​லா, ராஜு சுந்​தரம், அன்​பு​தாசன், யோக்ஜேபி, சம்​பத் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு உள்பட பன்​மொழிப் படமாக உரு​வாகும் இதன் படப்​பிடிப்பு முடிவடைந்​து​விட்​ட​தாக​வும் வருகிற 23-ந்தேதி டீஸர் வெளி​யாகும் என்​றும் லைகா நிறுவனம் சமூக வலை​தளத்​தில் தெரி​வித்​துள்​ளது.

‘இப்​படம் சமூகத்​தால் முழு​மை​யாகப் புரிந்து கொள்​ளப்​ப​டாத ஒருவன், தன் இலக்குகளை நோக்கி நகர்​வதைப் பேசும். வேட்​டை, கொள்​ளை, காமெடி என இந்​தப் படம் பரபரப்​பான சினிமா அனுபவத்​தைக் கொடுக்​கும்’ என இயக்குநர் சஞ்​சய் தெரிவித்​துள்ளார். இச்சூழலில் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27-ந்தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளது.

sigma movie debut directorial shoot wrapped up
jananayagan movieMusicsigma movieவிஜய்ஜேசன் சஞ்சய்