மனோஜை கடித்த நாய், முத்து சொன்ன விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை நாய் கடிக்க,முத்து விஷயம் ஒன்று சொல்லியுள்ளார்.

SiagadikkaAasai Serial Today Episode Update 26-08-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி உடம்பு சரியில்லை என போன் பண்ணியதால் மனோஜ் காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்க அவரது நண்பர் சந்தோஷ் போன் போட்டு எங்க ப்ரோ வந்துட்டு இருக்க என்று கேட்க ஸ்கூலுக்கு தான் வந்துட்டு இருந்தேன் ஆனா திடீர்னு ரோகிணிக்கு உடம்பு சரியில்லைன்னு போன் பண்ணா நான் வீட்டுக்கு போயிட்டு போன் பண்றேன் என சொல்லிவிட்டு போனை வைத்து விட்டு வீட்டுக்கு வருகிறார் காரை நிறுத்திவிட்டு இறங்கி வரும் பொழுது மனோஜ் அடித்த நாய் அங்க நின்று குலைத்துக் கொண்டிருக்க உன்னை திருப்பி அடிச்சா தான் போவியா என்று மனோஜ் கல்லை எடுத்து அடிக்கப் போக மனோஜின் காலில் கடித்து விடுகிறது.

உடனே வலியில் துடித்த மனோஜை இருவர் வீட்டுக்கு அழைத்து வர விஜயா பார்த்துவிட்டு என்ன ஆச்சு இவனுக்கு என்னாச்சு என்று பதறிப் போய் அனைவரையும் கூப்பிடுகிறார் பிறகு நாயின் உரிமையாளர் என்னோட ஜீரோ பழிவாங்கிடுச்சு என்று சொல்லுகிறார். அவரு கல் எடுத்து அடிச்சதுனால இன்னைக்கு அவர கடிச்சிருச்சு என்று சொல்ல மனோஜும் நாய் பண்ணுவது போல சில ஆக்டிவிட்டீஸ் பண்ணுகிறார். உடனே கொஞ்ச நேரத்தில் டாக்டரும் வந்து விட அவர் மனோஜிடம் சென்று நாய் எங்கே கடித்தது என்று கேட்க கேட்டுகிட்ட வெளியே என்று சொல்லுகிறார் பிறகு அனைவரும் சிரிக்க ரோகினி எதுக்காக இப்படி சிரிக்கிறீங்க என்று கேட்கிறார். பிறகு முத்து நான் கேட்டு சொல்றேன்னு சொல்ல உன் உடம்பில் நாய் எங்க கடிச்சது என்று காட்ட சொல்லி சொல்ல காலை காட்டுகிறார்.

பிறகு ரூமுக்கு அழைத்துச் சென்று காலில் கட்டு போட்டுவிட்டு ஊசி போடுகின்றனர் அஞ்சு வாரத்துக்கு ஊசி போடணும். என்றும் சொல்லிவிட்டு வெளியில் அழைத்து வந்து டெய்லியும் அந்த நாய் உயிரோட இருக்கான்னு பாத்துக்கோங்க அந்த நாய்க்கு ஏதாவது ஆச்சுன்னா இவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். மீனா இவருக்கு என்ன சாப்பாடு கொடுக்கணும் என்று கேட்க அது எதுக்கு நீ கேக்குற என மீனா முத்து சொல்ல ஆமா அதுதானே இவளே குத்து கல்லு மாதிரி நிக்கிறா என்ற விஜயா ரோகிணியை திட்டுகிறார்.உடனே நான்வெஜ் கொடுக்காமல் வெஜ் மட்டும் குடுங்க என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்று விடுகிறார். பிறகு விஜயா ஸ்கூலுக்கு போறேன்னு சொன்ன அதுக்கப்புறம் எதுக்கு வந்த என்று சொல்ல உடனே மனோஜ் ரோகினி தான் வர சொன்னான்னு தெரிஞ்ச அவளை திட்டுவாங்க என்று சொல்லிவிட்டு பர்ஸ் மறந்து விட்டோமா என்று சொல்லுகிறார் உடனே ரோகினி சரி, மனோஜ் போகலாம் என உள்ளே அழைத்துச் சென்று படுக்க வைக்கிறார்.

இப்போ உனக்கு எப்படி இருக்கு ரோகிணி தல சுத்துதுன்னு சொன்னேன் என்று சொல்ல எனக்கு பரவால்ல மனோஜ் உன்னை நாய் கடிச்சதுன்னு தெரிஞ்ச உடனே என்னோட பிரச்சனை எல்லாம் சால்வ் ஆயிடுச்சு என்று சொல்ல என்ன பிரச்சனை என கேட்கிறார் தல சுத்துறது தான் என்று சொல்லி சமாளித்துவிட்டு உனக்கு சாப்பிட என்ன வேணும் மனோஜ் என்று கேட்க பாலும் பிஸ்கெட்டும் என சொல்ல எனக்கு ரொம்ப பயமா இருக்கு மனோஜ் நீ என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்டால் நாய்க்கு புடிச்சது சொல்றேன் என்று சொல்ல மனோஜ் நாய் போல் செய்து காட்டுகிறார் உடனே பயப்பட நீ உஷாரா இரு மனோஜ் என்று சொல்லிவிட்டு வெளியில் வருகிறார். பிறகு மனோஜ் உட்கார்ந்து ஹாலில் போன் பார்த்துக் கொண்டிருக்க விஜயா பார்வதி இடம் கோவிலுக்கு போயிட்டு ஜோசியரை பார்த்துட்டு வந்துடலாம் என்று சொல்ல அண்ணாமலை எதற்கு ஜோசியர் என்று கேட்க மனோஜ்க்கு நேரம் சரியில்லை என்று சொல்லுகிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்க முத்து வந்து நான் மரம் நட போறேன் என்று சொல்ல மீனா செடி நட போறன்னு சொல்லுவாங்க மரத்தை எப்படி நட முடியும் என்று கேட்கிறார். ஆமா கரெக்டுப்பா நான் செடி நட போறேன் என்று சொல்லுகிறார். பிறகு அண்ணாமலை என்ன கேட்கிறார்? அதற்கு விஜயாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiagadikkaAasai Serial Today Episode Update 26-08-25
annamalaimanojMeenaMuthuRohiniSiagadikkaAasai SerialSiagadikkaAasai Serial Today Episode Update 26-08-25Vijayavijaytvஅண்ணாமலைசிறகடிக்க ஆசைமனோஜ்மீனாமுத்துரோகினிவிஜயா