மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: ஷாருக்கான் ஃபீலிங்ஸ்..

ஷாருக்கான் தனது 60-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மும்பை, மன்னத் பகுதியில் இருக்கும் தனது வீட்டின் மாடியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஷாருக் சந்திப்பது வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் கூட்டத்துக்கு முன்னால் நின்று ஷாருக்கான் எடுக்கும் செல்ஃபி வலைதளங்களில் வைரலாகும். ஆனால், இந்த ஆண்டு தன்னுடைய ரசிகர்களை சந்திக்க இயலாததற்கு ஷாருக் மன்னிப்புக் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

‘எனக்காக காத்திருந்த அன்பான மக்கள் அனைவரையும் நான் வெளியே சென்று வரவேற்க முடியாது என்று அதிகாரிகள் எனக்கு தெரிவித்து விட்டனர். உங்கள் அனைவரிடமும் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால், நெரிசல் கட்டுப்பாட்டுப் பிரச்சினைகள் காரணமாகவும் அனைவரது ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காகவும் இந்த முடிவு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

என்னை நம்பியதற்கும் புரிந்துகொண்டதற்கும் நன்றி. உங்களை விட அதிகமாக நான் உங்களைப் மிஸ் செய்வேன். உங்கள் அனைவரையும் பார்த்து அன்பைப் பகிர்ந்து கொள்வதற்கு ஆவலுடன் காத்திருந்தேன். உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘கிங்’ படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆகசன் காட்சிகளுடன் இருக்கும் இந்த டீஸரில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஷாருக்கான் தோன்றுகிறார். இந்த டீஸர் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இப்படத்தை ஷாருக் நடிப்பில் ‘பதான்’ படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இதில் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராஃப், ராணி முகர்ஜி உள்பட பலர் நடிக்கின்றனர். ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிகையாக அறிமுகமாகிறார்.

shahrukh khan fans waiting outside mannat on 60th birthday
birth dayking movieshahrukh khanதீபிகா படுகோன்ஷாருக்கான்