உதயா நடித்துள்ள ‘அக்யூஸ்ட்’ படம் பற்றிப் பார்ப்போம்..
உதயா, அஜ்மல் ஆகியோருடன் யோகிபாபு நடிக்கும் படம், ‘அக்யூஸ்ட்’. இப்படத்தை பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். கன்னட நடிகை ஜான்விகா ஹீரோயினியாக அறிமுகமாகி உள்ளார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், உதயாவுக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது. அவரை எந்த அவமானமும் பாதிக்காது, விக்ரமுக்கு ‘சேது’ போல உதயாவுக்கு ‘அக்யூஸ்ட்’ அமையும். டிரெய்லர் மிரட்டுகிறது’ என்றார்.
பின்னர் உதயா பேசும்போது, ‘ஒரு கட்டத்தில் திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன். ஆனால், எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். எனவே, அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ‘அக்யூஸ்ட்’ எனது கேரியரில் மிக முக்கிய படம்.
எனது 25-வது ஆண்டில் இப்படி ஒரு படம் கிடைத்திருப்பது எனது பாக்கியம். இந்த படத்துக்காக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி. இயக்குநர் அற்புதமாக உருவாக்கி இருக்கிறார். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்புகிறேன்’ என்றார்.