ரஜினி சாரை ரொம்ப ‘மிஸ்’ செய்கிறோம்: ‘கூலி’ படக்குழுவினர் நெகிழ்ச்சி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், உயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ படத்தைப் பற்றியும் ரஜினிகாந்த் பற்றியும் பேசுகையில்,

‘கூலி படப்பிடிப்புத் தளத்தில் ரஜினி சாரை ரொம்ப மிஸ் பண்றோம். அவருடைய போர்ஷன்ஸ் முடிந்து 4 மாதங்கள் ஆகிவிட்டது. இந்த 4 மாதங்களாக நாங்கள் ரஜினி சாரை மிஸ் செய்து வருகின்றோம். எனவே, டைம் கிடைக்கும் போதெல்லாம் ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு சென்று ரஜினி சாரை பார்த்து வருகின்றேன்.

மேலும், ரஜினி சார் கூலி படத்தை டப்பிங் ஸ்டுடியோவில் பார்த்துவிட்டு, என்னை கட்டியணைத்து பாராட்டியது மறக்க முடியாதது. படம் சிறப்பாக இருப்பதாகவும் இப்படம் தளபதி போல இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்’ என லோகேஷ் கூறினார்.

லோகேஷ் மட்டுமல்லாமல் கூலி படத்தில் பணியாற்றிய அனைவரும் ரஜினியை மிகவும் மிஸ் செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் ரஜினி மற்றவர்களிடம் பழகும் விதம் தான் என சொல்லலாம். தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை மறந்து மற்றவர்களிடம் இயல்பாகவும் யதார்த்தமாகவும் பழகுவார்.

அதனால் ரஜினியை செட்டில் அனைவரும் மிஸ் செய்கின்றனர். இல்லையென்றால் ஒட்டுமொத்த படக்குழுவும் ரஜினியை மிஸ் செய்கிறேன் என சொல்ல மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

rajinikanth missed by lokesh kanagaraj in coolie shooting spot
coolie moviedirector lokesh kanagarajRajinikanthரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ்