அமரன் பட குழுவை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் பாராட்டு..போட்டோஸ் இதோ..!

ரஜினிகாந்த் அமரன் பட குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் அக்டோபர் 31 தேதி திரையரங்குகளில் வெளியானது.

Rajinikanth met the team of Amaran in person and praised him.. Here are the photos..!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் உருவான இந்த படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார் மறைந்த மேஜர் முகூர்த்த வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஜினிகாந்த் அமரன் படத்தை பார்த்த பிறகு நேற்று கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த சூப்பர் ஸ்டார் இந்த படத்தை தயாரித்ததற்காக மனமார பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும் அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தயாரிப்பாளர் ஆர் மகேந்திரன் ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட பட குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

amaran movie teamRajinikanthrajinikanth wishes to amaran movie teamwishesஅமரன்சிவகார்த்திகேயன்ரஜினிகாந்த்ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்