இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் நடிக்க போகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Rajinikanth is going to act in director Nithilan’s direction

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடிக்க போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மகாராஜா படத்தை இயற்றிய இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டும் இல்லாமல் நித்திலன் சொன்ன கதை ரஜினிகாந்தை மிகவும் கவர்ந்து உள்ளதால் முழு ஸ்கிரிப்ட் வேலைகளும் தற்போது நடந்து வருகிறது.

இது மட்டும் இல்லாமல் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் மேலும் ரஜினிகாந்தின் இதுவரையிலான படங்களிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் படமாக இந்த திரைப்படம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Rajinikanth is going to act in director Nithilan’s direction
actdirectiondirector NithilangoinRajinikanthRajinikanth is going to act in director Nithilan's directionஇயக்குனர் நித்திலன்கூலிசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ்