கதிர், ஐஸ்வர்யா நடித்த சஸ்பென்ஸ் தொடர் ஓடிடி.யில் வெளியாகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..
ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களை விட வெப் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். குறிப்பாக திரில்லர் வெப் சீரிஸ் இன்னமும் ஸ்பெஷல். அவ்வகையில் தமிழில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரில்லர் வெப் சீரிஸ் ‘சுழல்’.
2022-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வெளியாகி வரவேற்பினை பெற்ற வெப் தொடர் ‘சுழல்’. இயக்குநர் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது.
இந்த சீரிஸில் பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, இளங்கோ குமரவேல், நிவேதிதா சதீஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மலைக் கிராமத்தில் காணாமல் போன சிறுமியை தேடும் க்ரைம் திரில்லர் கதையாக வெளியான இந்த தொடர் வரவேற்பினை பெற்றது.
சஸ்பென்ஸ், திரில்லர், ட்விஸ்ட் என சீரிஸாக வெளியான ‘சுழல்’ வெப் தொடர்களில் முக்கிய இடத்தை பிடித்தது. இதனையடுத்து, 2-ம் சீசனுக்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவ்வகையில், வரும் 28-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. முதல் சீசனில் நடித்த கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.