‘அகண்டா-2’ படம் பார்க்க பிரதமர் மோடி விருப்பம்: இயக்குநர் சீனு தகவல்..

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘அகண்டா 2’ படத்தை போயப்படி சீனு இயக்கியுள்ளார். இதில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஆதி பினிசெட்டி, கபீர் துல்ஹன் சிங், சாஸ்வதா சட்டர்ஜி, அச்யுத் குமார், பூர்ணா, ஹர்ஷா, ஜெகபதி பாபு, ராச்சா ரவி, ஐயப்பா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று வருகிறது. இப்படம் பாலய்யாவின் திரைப் பயணத்தில் சிறந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ‘அகண்டா-2’ படம் குறித்து சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது.

அதாவது, பாலய்யாவின் ‘அகண்டா 2’ படத்தை பிரதமர் மோடி பார்க்கவுள்ளதாக இப்படத்தின் இயக்குநர் போயப்பட்டி சீனு கூறியுள்ளார். ‘அகண்டா 2’ படம் குறித்து பிரதமர் மோடி கேள்விப்பட்டு ‘இவ்வளவு நல்ல படத்தை நாமும் பார்த்து ஆதரவளிக்க வேண்டும்’ என கூறி, திரைப்படத்தை பார்க்க முடிவு செய்துள்ளதாக போயப்பட்டி சீனு தெரிவித்துள்ளார்.

pm modi is interested in watching the film akhanda 2
akhanda 2 moviedevotionpm modiஅகண்டா-2பிரதமர் மோடி