பராசக்தி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
Parasakthi movie title teaser update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது சுதா கொங்கார இயக்கத்தில் எஸ்.கே 25 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது “பராசக்தி” தெரியவந்துள்ளது.
இந்தப் படத்தில் அதர்வா முரளி ரவிமோகன், ஸ்ரீ லீலா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
அதில் ரவி மோகனின் மிரட்டலான வில்லத்தனமும் சிவகார்த்திகேயனின் டயலாக் ஆக “சேனை ஒன்று தேவை.. பெருஞ்சேனை ஒன்று தேவை..” என்று கூறுகிறார். இந்த டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.