ஜனநாயகன் திரை விமர்சனம்

சிறையில் கைதியாக இருந்தாலும், அந்தச் சிறையின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்று அனைவரின் நம்பிக்கையையும் பெற்றவராக இருக்கிறார் விஜய். அவருக்கு துணையாக செயல்படும் போலீஸ் அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனன், உயர் அதிகாரிகளின் எதிர்ப்பை சந்தித்து, பின்னர் ஒரு விபத்தில் உயிரிழக்கிறார். தனது மகள் மமிதா பைஜூவை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற கௌதம் மேனனின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பை விஜய் ஏற்றுக்கொள்கிறார். மமிதாவுக்கு கடுமையான பயிற்சிகளை அளித்து ராணுவத்தில் சேர்க்க முயற்சிக்கும் நிலையில், மறுபுறம் ஆப்பிரிக்காவில் […]

யோகி பாபுவுக்கு இரட்டை மகிழ்ச்சி!

மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று முடிவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி இரட்டை மகிழ்ச்சியை கொண்டாடினர். ‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’ உள்ளிட்ட படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். இந்தப் படத்தில் கிஷோர், […]

கவின், நயன்தாரா நடித்த ‘ஹாய்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ரசகுல்லா’ பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை எஸ். […]

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆகாயம்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் “ஆகாயம்”. இந்தப் படத்தை, “தினந்தோறும்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். “தினந்தோறும்” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அந்தப் பெயரிலேயே ரசிகர்கள் மற்றும் திரையுலகினரால் அழைக்கப்பட்ட நாகராஜ், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் “மின்னலே”, “காக்க காக்க” உள்ளிட்ட வெற்றிப் படங்களில் கதாசிரியராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. “கன்னி […]

இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குநர் ராம் இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. உணர்வுபூர்வமான கதைகளை தனித்துவமாக சொல்லும் இயக்குநர் ராமின் புதிய படைப்பான இதில், நிவின் பாலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கதாநாயகனாக மீண்டும் நடிக்கிறார். அவருடன் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், அஞ்சலி கதாநாயகியாக இணைந்துள்ளார். இப்படத்திற்கு இயக்குநர் ராமின் நீண்டநாள் கூட்டாளியான […]

யாஷின் “டாக்சிக்” படத்தின் “தடுமாறுதே” வீடியோ பாடல் வெளியானது

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘தடுமாறுதே’ வெளியாகியுள்ளது. ‘தபாஹி’ பாடலின் மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த மெலடி, ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரங்களின் காதல் உறவின் புதிய பரிமாணத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. தீவிரமான காதலின் ஆற்றலை வெளிப்படுத்திய ‘தபாஹி’ பாடலுக்கு மாறாக, ‘தடுமாறுதே’ பாடல் மென்மையான உணர்வுகள், ஏக்கம், சொல்லப்படாத காதல் உணர்ச்சிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. யாஷ் மற்றும் தாரா […]

தேசிய ட்ரோன் விருதால் கௌரவிக்கப்பட்ட ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்!

தமிழ் திரையுலகின் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளரான எம். அரவிந்த் குமார், தனது DroneMan Academy உடன் இணைந்து, Drone Federation of India சார்பில் நடைபெற்ற NIDAR 2025-26 நிகழ்வில் இரண்டு தேசிய அளவிலான ட்ரோன் விருதுகளை வென்று புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைக்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் பாராட்டு தெரிவித்ததுடன், NIDAR 2.0 போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து அதிக அணிகள் பங்கேற்க வேண்டும் என்றும் ஊக்கமளித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் […]

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

அர்ஜூன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான “கான் சிட்டி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா இன்று உற்சாகமான சூழலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடகங்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். இந்நிகழ்வினில் நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர் பேசியதாவது.., முதலில் […]