ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் எப்போது? வெளியான தரமான தகவல்..!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கும் இந்த படத்தை KVN புரொடக்ஷன் தயாரித்துள்ளது. மேலும் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ,நரேன், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த […]

கவனத்தை ஈர்க்கும் ஸ்ருதிஹாசனின் ‘தி ஐ ‘( The Eye) பட ஃபர்ஸ்ட் லுக்

வரவேற்பை பெற்று வரும் ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘தி ஐ’ ( The Eye ) ஹாலிவுட் பட ஃபர்ஸ்ட் லுக் இசைக்கலைஞர்- பாடகி – பாடலாசிரியர்- தனித்துவமான திறமை மிக்க நடிகை- என பன்முக ஆளுமையான ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் தி ஐ ( The Eye) எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதற்கு உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. ஹாலிவுட் இயக்குநர் டாப்னே ஷ்மோன் […]

ட்ரெண்டிங்கில் இருக்கும் அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ்மோர்’ பட பாடல்

தமிழில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பான் இந்திய இசையமைப்பாளரான ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் உருவாகி, ‘ஒன்ஸ்மோர்’ எனும் படத்தில் இடம்பெற்ற ”வா கண்ணம்மா..’ எனும் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன் ஆயிரக் கணக்கிலான ‘ ரீல்ஸ் ‘களிலும் இடம் பிடித்து புதிய மைல்கல் பயணத்தை தொடங்கி இருக்கிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஒன்ஸ்மோர் ‘ […]

கார்த்தி வெளியிட்ட நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’ பட முன்னோட்டம்

நாக சைதன்யா நடிக்கும் ‘தண்டேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ தண்டேல் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார். இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ தண்டேல் ‘எனும் […]

ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘ கிங்ஸ்டன்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு இசையமைப்பாளர் – பின்னணி பாடகர்- நட்சத்திர நடிகர் -தயாரிப்பாளர்- என பன்முக ஆளுமை கொண்ட ‘ இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராசா ராசா..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி […]

நீண்ட நாள் கனவு நிறைவேறியது.. கே.பி.ஒய் சரத் எமோஷனல் பதிவு..!

நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக சரத் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சரத். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். காமெடி நடிகராக பயணத்தை தொடங்கிய இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக புகைப்படத்துடன் பதிவு ஒன்றை எமோஷனலாக வெளியிட்டு உள்ளார். அதில் […]

டேஸ்ட்டாக சமைத்து, தானே பரிமாறவும் செய்தார் அஜித்: மகிழ் திருமேனி நெகிழ்ச்சி

‘தல’ அஜித் கார் ரேஸில் மட்டுமல்ல, குக்கிங்கிலும் செம கிங்கு தான் என்கிறார் மகிழ். அதாவது… ‘தல’ அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான ‘விடாமுயற்சி’ படம் வருகிற 6-ந்தேதி வெளியாகவுள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனி கடந்த சில நாட்களாக விடாமுயற்சி புரொமோஷனில் தீவிரமாக இறங்கியுள்ளார். அவர் பேசும் விஷயங்கள் படத்தின் மீதான ஹைப்பை பல மடங்கு உயர்த்தி வருகின்றது. இந்நிலையில், படம் துவங்கும்போதே, ஏகப்பட்ட நெகட்டிவிட்டி பரவும், அதற்கெல்லாம் தயாரா இருங்க’ என அஜித் […]

தான் படித்த பள்ளியில், மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தல்

‘உடன் உள்ளவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும்’ என எஸ்கே கூறியுள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. மாஸ் ஹீரோவாக உருவாகியுள்ள சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், திருச்சியில் தான் பயின்ற பள்ளிக்கூட நிகழ்ச்சி விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், ‘இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை நான் பயின்றேன். இன்று நான் நடிகர், சிறப்பு விருந்தினர் என இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி நான் இந்த பள்ளியில் படித்து […]

சிம்பு பிறந்த நாளில், 3 திரைப்படங்களின் அப்டேட்ஸ்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பிப்ரவரி 3-ம் தேதி சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் 3 படங்களின் அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வகையில், முதல் அறிவிப்பாக ‘பார்க்கிங்’ இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அடுத்ததாக, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த str- 48 திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. தேசிங்கு பெரியசாமியின் திரைப்படம் சிம்புவின் ஐம்பதாவது படமாக உருவாக […]

‘என் இனிய பொன் நிலாவே’ பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: கோர்ட் தீர்ப்பு

இளையராஜா போட்ட ஒரு மெட்டை, அவரது மகன் யுவன் ரீகிரியேட் செய்து வரவேற்பு பெற்றுள்ளது. இது குறித்த முழு விவரம் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், ‘அன்னக்கிளி’ படம் தொடங்கி, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இசையால் ரசிகர்கள் மனதில் நிறைந்திருப்பவர் ‘இசைஞானி’ இளையராஜா. இந்நிலையில், மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இவர் இசையமைத்த, ‘குணா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை பயன்படுத்துவதற்காகவும், வழக்கு தொடர்ந்தார். அதேபோல் மற்ற சில படங்களில் பாடல்களை பயன்படுத்தியதற்காகவும் தன் எதிர்ப்பை […]