சிம்பு பிறந்த நாளில், 3 திரைப்படங்களின் அப்டேட்ஸ்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பிப்ரவரி 3-ம் தேதி சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் 3 படங்களின் அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வகையில், முதல் அறிவிப்பாக ‘பார்க்கிங்’ இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

அடுத்ததாக, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த str- 48 திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.

தேசிங்கு பெரியசாமியின் திரைப்படம் சிம்புவின் ஐம்பதாவது படமாக உருவாக இருப்பதாகவும், அதன் அறிவிப்பு தான் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மூன்றாவது அறிவிப்பாக, அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் திரைப்பட அப்டேட் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளாக சிம்புவின் நடிப்பில் ஒரு படமும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது ரிலீஸாகும் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு முக்கிய கேரக்டரில் வருகிறார்.

 

'பார்க்கிங்'actor simbubirth daythug life movieதேசிங்கு பெரியசாமி