ஹாய் திரைவிமர்சனம்

தனது பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு, காதல் கைகூடாததால் அவரது பெற்றோர் பெண் பார்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால், காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்பதில் உறுதியாக இருக்கும் கவின், குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். மறுபுறம், தாயின் அன்பும், தந்தையின் அரவணைப்பும் இல்லாமல் வளரும் நயன்தாரா, திருமண வாழ்க்கைக்குள் சிக்காமல் தனது வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். எதிர்பாராத விதமாக அவருக்கும் திருமண […]

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் அனிருத்!

சிலம்பரசன் TR நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை தரமணியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்டபடி எந்தவிதத் தொய்வும் இன்றி படப்பிடிப்பு பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிலம்பரசன் TR, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சந்தித்து, படத்தின் பணிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். ரசிகர்கள் […]

பிரகாஷ் ராஜ் நடித்த ஃபாதர் திரைப்படத்தின் டீசர் வெளியானது!

பிரபல இயக்குநர் ஆர். சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஃபாதர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தந்தை – மகன் இடையேயான ஆழமான பாசம், புரிதலின்மை, எதிர்பார்ப்புகள் மற்றும் சொல்லப்படாத உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டார்லிங் கிருஷ்ணா மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ராஜ்மோகன் இயக்கியுள்ளார். முழுக் கதையையும் வெளிப்படுத்தாமல், படத்தின் உணர்வுப்பூர்வமான களத்தையும் முன்னணி நடிகர்களின் […]

உளவுத்துறை நடவடிக்கைகளின் பின்னணியில் ‘ஆபரேஷன் டிரால்’

அறிமுக இயக்குநர் ரத்தீஷ் வேகா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குட்வில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பான் இந்தியா இன்வெஸ்டிகேட்டிவ் ஆக்‌ஷன் த்ரில்லர், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஜம்மு & காஷ்மீரின் டிரால் பகுதியில் உயிரிழப்பை ஏற்படுத்திய கான்வாய் தாக்குதலை பின்னணியாகக் கொண்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் […]

அவெஞ்சர்ஸ் ரசிகர்களே மீண்டும் கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்!

மார்வெல் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், உலகம் முழுவதும் சாதனை படைத்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் மீண்டும் இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – என்கோர்’ என்ற பெயரில் இப்படம் செப்டம்பர் 25, 2026 முதல் இந்தியா முழுவதும் திரையிடப்பட உள்ளது. மார்வெல் ஸ்டுடியோஸின் ‘இன்ஃபினிட்டி சாகா’வின் பிரம்மாண்டமான இறுதிப்பகுதியான இப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகிறது. மேலும், ஐமேக்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் புதிய பிரீமியம் லார்ஜ் […]

டாக்ஸிக் திரை விமர்சனம்

இந்தியா 1947-ல் சுதந்திரம் பெற்றுவிட்டாலும், கோவாவில் போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் கேங்ஸ்டர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் சால்வடாரின் நிழலில் கதை தொடங்குகிறது. அவருக்கு துணையாக ராயா (யஷ்) மற்றும் அவரது அக்கா கங்கா (நயன்தாரா) இருக்கின்றனர். தங்களது பெற்றோரை கொன்றவரை பழிவாங்கும் நோக்கில் ராயாவும் கங்காவும் போதைப்பொருள் கடத்தல் உலகில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்கின்றனர். மது, பெண்கள் என கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழும் ராயா, தனது பாஸ் சால்வடாரின் மகள் ரெபெக்காவுடன் (தாரா சுதாரியா) […]

சாதனை வீரருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்

காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, ராஜா முத்துப்பாண்டி தனது காமன்வெல்த் வெள்ளிப் பதக்கத்தை சிம்ரனிடம் காண்பித்தார். அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டிய சிம்ரன், இந்தச் சாதனை அவரது வெற்றிப் பயணத்தின் தொடக்கம் மட்டுமே என்றும், எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை அவர் எட்ட […]