சந்தானம் நடித்த படத்திலிருந்து, சர்ச்சைக்குரிய பாட்டு வரிகள் நீக்கம்..
‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இடம் பெற்ற பாட்டு வரிகள் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் நாளை ரிலீஸாகிறது. இப்படத்தில், திருப்பதி ஏழுமலையானை கிண்டல் செய்யும் விதமாக பாடல் இடம்பெற்றதாக ஜனசேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். தற்போது படத்தில் இருந்து அந்த பாடலை படக்குழு நீக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தயாரிப்பாளரான ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் […]