கேமியோ கலாச்சாரத்தை பின்பற்றுவதில்லை: ‘கூலி’ படம் பற்றி லோகேஷ் பகிர்வு..

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ பட ஷுட்டிங் முடிவடைந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் படம் குறித்தும் அமீர்கான் கதாபாத்திரம் பற்றியும் விளக்கியுள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘படத்தில் அமீர்கான் கதாபாத்திரம் நீட்டிக்கப்பட்ட கேமியோவாக இருக்கும்.படம் முழுவதுமே அமீர்கானின் ரோலை ஆடியன்ஸ் உணர்வார்கள். இப்படம் வெறும் கேமியோ நடிகர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டது கிடையாது. நான் கேமியோ கலாச்சாரத்தை பின்பற்றுவதும் இல்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரும் சரியான கதாபாத்திரத்தில் இருப்பார்கள். இவையெல்லாம் மக்களுக்கு பிடித்திருந்தால், கண்டிப்பாக ‘கூலி’ பிளாக் பஸ்டராக இருக்கும். […]

அஜித் 64 படத்தில் இணைந்த பிரபல நடிகை..!

அஜித் 64 படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.+ தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்த படமான அஜித்64 படத்தை இயக்க உள்ளார். இந்த தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகி வந்தது. இந்த […]

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படக்குழு மீது திரிஷா அப்செட்..

திரிஷா நடிப்பில் இந்த ஆண்டு ஐடெண்டிட்டி, விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் என நான்கு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. அடுத்ததாக, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ படத்தில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் திரிஷா. இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சூர்யாவின் 50-வது பிறந்தநாள் கடந்த ஜூலை 23-ந்தேதி கொண்டாடப்பட்டது. அன்று ‘கருப்பு’ படத்தின் டீசரை படக்குழுவினர் ரிலீஸ் செய்தனர். இது, […]

‘கூலி’ படத்தில் எனது கதாபாத்திரம்: ஸ்ருதிஹாசன் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், ‘கூலி’ படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன், தனது கதாபாத்திரம் குறித்து தெரிவிக்கையில், ‘ரஜினி சார் எப்போதுமே ரொம்ப கூலாக இருப்பார். அவர் எவ்வளவு பெரிய வெற்றிகளை கண்டுவிட்டார். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சவுகரியமாக மாற்றும் வழி அவரிடம் இருக்கிறது. படத்தில், சத்யராஜ் சாருடைய மகளாக ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். முழுக்க ஆண்களை […]

தினமும் 12 மணிநேரம் வேலை செய்யத் தயார்: நடிகை வித்யாபாலன் ஓபன் டாக்..

தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து இயக்கும் படம், ‘ஸ்பிரிட்’. இப்படத்தில், தீபிகா படுகோன் முதலில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், தினமும் 8 மணி நேரத்துக்குமேல் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்பதால், அதிலிருந்து வெளியேறினார். இந்த விவகாரம் இந்தி சினிமாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து, புதிதாகக் குழந்தை பெற்றுள்ள தாய்மார்களுக்கு சினிமாவில் வேலை நேரம் குறித்து விவாதம் எழுந்துள்ளது. இது குறித்து, நடிகை வித்யா பாலன் தெரிவிக்கையில், ‘எனக்கு ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை […]

பிரதீப் ஹீரோவாக நடிக்கும் படத்தில், கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன்..

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன், அதர்வா ஆகியோரும் நடித்து வருவது தெரிந்ததே. அவ்வகையில், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படம் ‘டியூட்’. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியது படக்குழு. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தின் தமிழக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கவுரவ […]

‘தலைவன் தலைவி’ படத்தின் கலெக்‌ஷன்: படக்குழு உற்சாகம்..

பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. காதல், திருமணம், குடும்ப பிரச்சினை, உறவுக்காரர்களால் ஏற்படும் சிக்கல்கள், விவாகரத்து என உணர்வுப்பூர்வமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், அனைவருக்குமே படத்தின் காட்சிகள், நகைச்சுவை, ஊடல், கூடல் என அனைத்துமே பிடித்திருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் முதல் நாளில் சுமார் 6 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருக்கிறது. இதனால், படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். தற்போதைய சூழலில் இப்படம் தமிழகத்தில் […]