விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவிருந்த ஜனநாயகன் படம், ரிலீஸ் தொடர்பாக நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக சிபிஐ தலைமை அலுவலகத்தில் 2-வது முறையாக விசாரணைக்கு ஆஜராவதற்காக நடிகரும் தவெக தலைவருமான விஜய்யிடம் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025 செப்டம்பர் 27-ந்தேதி விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். […]
கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியார்’ படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள சர்தார்-2, ‘மார்ஷல்’ படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், விவசாயத் துறைக்காக உழைக்கும் மனிதர்களையும், அமைப்புகளையும் கவுரவித்து அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள்’ விழா 7-வது ஆண்டாக சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான கார்த்தி, நடிகர் சிவகுமார், ரவி மோகன், ரேவதி, கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், அனந்து […]
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் பிப்ரவரி அல்லது ஏப்ரலில் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் ‘சூர்யா-46’ படம் சில மாத இடைவெளியில் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா, ஜீத்து மாதவன் கூட்டணியில் உருவாகும் 47-வது திரைப்படம் தயாராக இருப்பதாக அறிவிப்புகள வெளியாகிவிட்டன. மேலும் இப்படத்திற்கான ப்ரோமோ ஷூட் கூட ) நடைபெற்று முடிந்தது. தற்போது சூர்யா இல்லாத காட்சிகளை இயக்குநர் ஜீத்து படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. சூர்யா […]
காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதி மிருணாள் தாகூரை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் தனுஷ் என தகவல் வெளியானது. இந்நிலையில் தனுஷுக்கு மிகவும் நெருக்கமான மும்பை இயக்குநர் விளக்கம் அளித்திருப்பதாக பாலிவுட் ஊடகம் வாயிலாக தெரிவித்திருப்பதாவது: நானும், தனுஷும் தினமும் செல்போனில் பேசிக் கொள்வோம். ஆனால், இப்படியொரு திருமணம் நடப்பதாக அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்கிறாரா?. இந்த கல்யாணம் பற்றி எனக்கு தெரியாது என்றால் வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. விவாகரத்து […]
ஸ்பான்சர்களை தேடுவதற்கான விளக்கத்தை அஜித் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது கார் ரேசில் அதிகம் கவனம் செலுத்தி வரும் அஜித் குமார் ஸ்பான்சர்களை தேடுவதற்கான காரணத்தை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது நான் தனிப்பட்ட வகையில் […]