பிரபல கேமராமேன் ரவியாதவ் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு!

இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான தியாகராஜன் இயக்கத்தில், டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிக்கும் “ரஞ்சன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்.கே. சுரேஷ், மோகன்ராம், ஆதிரா, மானஸ்வி, ஆதேஷ்பாலா, சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரியும், நடிகை தேவயானியின் மகள் பிரியங்காவும் இத்திரைப்படத்தின் மூலம் இளம் ஜோடியாக அறிமுகமாகிறார்கள். இளைஞர்களிடையே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகும் […]

பாலாஜி சக்திவேல் கதாநாயகனாக நடித்துள்ள பைலட் திரைப்படம் ‘ஆஃப் தி ரெக்கார்ட்’!

இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் நடிகராகவும் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள பாலாஜி சக்திவேல், தற்போது ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ என்ற 12 நிமிட பைலட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் அவர், இந்தப் படத்தில் இரட்டை பரிமாணங்கள் கொண்ட வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘டிஎன்ஏ’, ‘காந்தி கண்ணாடி’ மற்றும் ‘வாரண்ட்’ இணையத் தொடர் போன்ற படைப்புகளில் தனது இயல்பான மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பால் கவனம் […]

இந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “பெத்தி” – ராம் சரண்!

“இந்திய கிராமங்களின் திறமைகளையும், உண்மையான இந்திய ஆன்மாவையும் பெரிய திரையில் கொண்டாடும் படம்தான் ‘பெத்தி’” என டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் சரண் உருக்கமாகப் பேசியுள்ளார். மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள கிராமத்து விளையாட்டு பின்னணியிலான பிரம்மாண்ட திரைப்படம் “பெத்தி”, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் […]

KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்’ பூஜையுடன் தொடக்கம்!

பேட்மிண்டன் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படமாக ‘ரீமேட்ச்’ உருவாகிறது. இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஏராளமான படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து வயதினராலும் விரும்பி விளையாடப்படும் பேட்மிண்டன் விளையாட்டு இதுவரை பெரிய அளவில் திரையில் பிரதிபலிக்கப்படவில்லை. அந்த குறையை போக்கும் விதமாக இளமை, காதல், விளையாட்டு உணர்வுகள் கலந்து உருவாகும் படமாக ‘ரீமேட்ச்’ உருவாகியுள்ளது. ‘கலக்கப் போவது யாரு?’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான KPY பாலா இப்படத்தில் கதாநாயகனாக […]

பிளாஸ்ட் – திரை விமர்சனம்

மார்ஷியல் ஆர்ட்ஸ் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் குடும்ப திரைப்படமான ‘பிளாஸ்ட்’, ஸ்டைலிஷ் ஆக்ஷன் காட்சிகளும், விறுவிறுப்பான கமர்ஷியல் அம்சங்களும் இணைந்து ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளராக அர்ஜுன் நடித்துள்ளார். அநீதிக்கு எதிராக எப்போதும் போராட வேண்டும் என்ற கொள்கையுடன் வாழும் அவர், தனது மகள் நிலாவையும் அதே எண்ணத்தோடு வளர்க்கிறார். நிலா கதாபாத்திரத்தில் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். அபிராமி, அர்ஜுனின் மனைவியாகவும், மார்ஷியல் […]

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு ஃபீல் குட் குடும்ப திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளார். படத்தின் […]