“நான் பிறந்தது சென்னையில் தான்”- பெத்தி பட விழாவில் நடிகர் ராம்சரண் பேச்சு

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட விளையாட்டு பின்னணித் திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்துள்ள இப்படம், ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் வாழ்க்கைப் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு, உணர்வுகள், ஆக்‌ஷன் மற்றும் ஊக்கமூட்டும் தருணங்கள் கலந்த இந்தப் படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் […]

ஹெச் வினோத் உதவி இயக்குநர் படத்தில் ஆகாஷ் முரளி!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படைப்புகளை வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு திரைப்படம் சிறப்பான பூஜையுடன் இனிதே துவங்கியது. தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் துவக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தை […]

ஐஸ்வர்யா ராஜேஷ் – விக்ராந்த் நடிக்கும் அண்டர் 18!

SR PRODUCTIONS தயாரிப்பில் கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிக்கும் “அண்டர் – 18” படத்தின் பூஜை விழா கோலாகலம்! ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் தயாரிப்பாளர் ஜெகதீஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம் “அண்டர் – 18” (Under – 18). இயக்குநர் வெற்றிமாறனின் நீண்டகால இணை இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் பெருமாள் சாமி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் மற்றும் கிஷோர் […]

ஜூன் திரைக்கு வரும் ஹாரர் திரில்லர் ‘டார்க் ஜெயிண்ட்’!

உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படமான ‘டார்க் ஜெயிண்ட்’ வரும் ஜூன் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ஹரி உத்ரா நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. இயக்குநர் கே.எஸ். கிஷன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், ஒரு கிராமத்தில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, கற்பனை கலந்த திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஹாரர் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவான இந்த படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் வெளியீட்டுத் தேதி!

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் வழங்கும், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம், அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இதன் மூலம் படத்தின் […]