‘ஜெயிலர்2’ ஷுட்: மக்களோடு கலந்து லைவ் லொக்கேஷனில் ரஜினி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தை தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படத்தில் பணிபுரிந்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கேரளா, சென்னை என மாறி மாறி நடைபெற்று வருகின்றது.

சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் முக்கியமான ஒரு காட்சியை நெல்சன் படமாக்கினார். அதாவது, ரஜினியை மக்களோடு மக்களாக நடமாடவிட்டு, அந்த காட்சியை நெல்சன் ரிஸ்க் எடுத்து படமாக்கியதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஜெயிலர் படத்திலேயே பெரும்பாலும் லைவ் லொகேஷனை நெல்சன் பயன்படுத்தி இருப்பார். அதுபோல, ‘ஜெயிலர் 2’ படத்திலும் பெரும்பாலும் முடிந்தவரை லைவ் லொகேஷனில் படப்பிடிப்புகளை நடத்தி வருகிறார். அப்போதுதான் காட்சி தத்ரூபமாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்.

இதில், மாஸ் ஹீரோவான ரஜினியை லைவ் லொகேஷனில் படமெடுப்பதெல்லாம் முடியாத காரியம். ஆனாலும், அதை ரிஸ்க் எடுத்து நெல்சன் செய்து வருகின்றார். ரியல் லொகேஷனாக இருந்தாலும், ரஜினியை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு படமாக்கப்பட்டு வருகின்றது.

இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பகத் பாசில், சுராஜ் உள்பட முதல் பாகத்தில் நடித்த சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோரும் இணகயவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ரஜினி ‘கூலி’ படத்துக்கான ப்ரோமோஷனில் படக்குழுவுடன் பிஸியாக இருக்கின்றார். கூலி படத்தையும் ஜெயிலர் 2 படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. ‘ஜெயிலர் 2’ படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 14-ந்தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

nelson shooted important scene in jailer 2 movie
coolie moviejailer2 movieRajinikanthஎஸ்.ஜே. சூர்யாரஜினி