நாளை ரீ ரிலீஸ் ஆகும் மங்காத்தா.. வெங்கட் பிரபு போட்ட பதிவு.!!

மங்காத்தா திரைப்படம் நாளை ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

mankatha movie re release update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்றான மங்காத்தா திரைப்படம் நாளை ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா, பிரேம்ஜி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்

இந்த படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு நாளை மங்காத்தா ரி ரிலீஸ் ஆகப்போவதாகவும் அர்ஜுன் சாரோட ஃபர்ஸ்ட் டே சூட் என்று குறிப்பிட்டு ஒன் ஆஃப் மை ஃபேவரிட் சீன்ஸ் என பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் வழக்கம் போல் இந்த படத்தை கொண்டாட காத்திருக்கின்றனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

mankatha movie re release update viral
mankatha moviemankatha movie re release update viralre releaseupdate viralஆதிக் ரவிச்சந்திரன்குட் பேட் அக்லிமங்காத்தா