மதராசி படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்..!

மதராசி படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கி உள்ளது.


madharasi movie ott release update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார். சுமார் 200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் உருவாகி வரும் இந்தப் படத்தில் ருக்மணி வசந்த்,வித்யூத் ஜம்முவால், பிஜு மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் ரிலீஸாக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் இன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் 23 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


madharasi movie ott release update
madharasi moviemadharasi movie ott release updateOTTreleaseupdateஅமரன்ஏ.ஆர்.முருகதாஸ்சிவகார்த்திகேயன்பிஜு மேனன்மதராசிருக்மணி வசந்த்வித்யூத் ஜம்முவால்