தமிழ்த் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என அடுத்தடுத்த அவதாரங்களில் கலக்கி வருகின்றார். தற்போது ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. மேலும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது இப்படத்திலிருந்து சன் பிக்சர்ஸ் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் விலகியதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜே இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும், நல்ல வசூலை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்தது. ஆனால், இதெல்லாம் வதந்தி தானாம். சன் பிக்சர்ஸ் தான் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கப்போகும் முதல் படத்தை தயாரிக்க இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்றே சொல்லப்படுகிறது.
இதுவரை லோகேஷ் இயக்கிய அனைத்துப் படங்களும் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்கள். கூலி படம் மட்டுமே கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதற்காக இந்தளவிற்கு லோகேஷை விமர்சிப்பதும், அவரின் அடுத்தடுத்த படங்கள் மீது வதந்திகளை பரப்புவதும் சரியல்ல என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
விரைவில் அவரின் அடுத்த படம் குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து லோகேஷ் ஹீரோவாக நடிக்கப்போகும் முதல் படமும் ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும். இதனை லோகேஷ் ஏற்கனவே அறிவித்துவிட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.