பழம்பெரும் நடிகைக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது..

பழம்பெரும் நடிகர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அவ்வகையில் இதோ ஒரு நிகழ்வு..

தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் செப்.21-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. கடந்த சில வருடங்களாக நடிகர் சங்கப் பொதுக்குழுவில் மூத்த கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்து வருகின்றனர்.

அதன்படி, இந்த வருடப் பொதுக்குழுவில் மூத்த நடிகை எம்.என்.ராஜத்துக்கு விருது வழங்க உள்ளனர்.

நடிகை எம்.என்.ராஜம், 1950 முதல் 1960-களின் இறுதிவரை முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். குறிப்பாக ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், அலிபாபாவும் 40 திருடர்கள் படங்களில் நடித்து அனைவரையும் ஈர்த்துள்ளார். சுமார் 200 படங்கள் வரை நடித்துள்ளார்.

சமீபத்தில் 90-வது பிறந்த நாளைக் கொண்டாடிய அவருக்கு, நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியும் துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகனும் அவரை நேரில் சந்தித்து இதற்கான அழைப்பை விடுத்தனர்.

lifetime achievement award for senior actress mn rajam
actress m.n.rajamawardwomensசாதனையாளர் விருதுநடிகை எம்.என்.ராஜம்