காதல் மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் புகழ்.
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
சின்னத்திரையில் கலக்கியது மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்த இவர் கதாநாயகனாக மிஸ்டர் ஜு கீப்பர் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வந்தது இந்த நிலையில் இவரது திருமண நாள் என்பதால் மனைவிக்கு அழகான திருமண நாள் வாழ்த்து சொல்லி உள்ளார்.
அதாவது காதல் என்ற கடலில் மூழ்கினேன் என் முத்தாகிய உன்னை எடுக்க உன் அன்பின் ஆழம் அதிகரிக்க மூழ்கிக் கொண்டே இருக்கிறேன் நீ கடமை என்னும் சிற்பிக்குள் நானும் காதல் எனும் கடலுக்குள் நீயும் விடுவதா இல்லை.. நானும் எழுவதாய் இல்லை.. ஹாப்பி அனிவர்சரி உயிரே என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.