கவின் நயன்தாரா நடிக்கும் ஹாய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் அறிமுகமானவர் கவின். அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். பலரும் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும் ஆதரவு கொடுத்து வந்தனர்.
பிக் பாஸில் இருந்து வந்த கையோடு தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது விஷ்ணு இடவன் இயக்கத்தில் ஹாய் என்ற படத்தில் நடிக்கிறார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டு உள்ளனர். இந்த பதிவை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.