கார்த்தி 29 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி 29 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.
மேலும் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிகர் நானி சிறப்பு தோற்றத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் பூஜை நாளை தொடங்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு மார்ஷல் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.