காந்தாரா 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
kantara 2 movie first look poster update
ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியாகிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் காந்தாரா அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 அதாவது காந்தாரா 2 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உள்ளனர். அதில் ரிஷப் ஷெட்டி பின்னால் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.
இந்தப் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது. இந்த நிலையில் தற்போது அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது